புதன்கிழமை, ஜனவரி 15, 2025

30 வருட பகை, மீண்டும் ரஜினி படத்தில் சத்யராஜா.? ஒரே பேட்டியில் உச்சி குளிர வைத்ததால் கிடைத்த வாய்ப்பு

80 களில் ரஜினிகாந்துடன் இணைந்து பிரபு, கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் சத்யராஜும், ரஜினியின் படங்களில் அதிகமாக இணைந்து நடித்துள்ளார். அந்த சமயத்தில் தமிழகத்தில் காவிரி பிரச்சனை குறித்து பல சினிமா பிரபலங்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, ரஜினிகாந்த் மட்டும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் இருந்து வந்தார்.

காரணம் ரஜினிகாந்தின் பிறப்பிடம் கர்நாடகா என்பதால் அவர் காவிரி விவகாரத்தில் தலையிடாமல் மௌனம் காத்து வந்தார். இதனால் நடிகர் சத்யராஜ், மேடையிலேயே ரஜினிகாந்த் ஆதரவு அளிக்காதது பற்றி வெளிப்படையாக பேசி தனது ஆவேசத்தை தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்து 30 வருடங்கள் ஆகி வரும் நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து அதன் பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தனர்.

Also Read:  ஹீரோவை விட சத்யராஜ் நின்னு பேசி சாதித்து காட்டிய 5 படங்கள்.. ரோசம் புடிச்ச சிவனாண்டி செஞ்ச அக்கப்போர்

இந்நிலையில் அண்மையில் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கு என்பதில் பலருக்கும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. அதிலும் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று வாரிசு பட ஆடியோ லாஞ்சில் சரத்குமார் பேசிய பேச்சுக்கு பல தரப்பினர் எதிர்ப்புகளை கிளப்பி வருகின்றனர். விஜய்க்கு ஏற்கனவே தளபதி பட்டம் இருக்கும் நிலையில், ஏன் அவர் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுகிறார் என அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இவ்வளவு நடந்தும் விஜய் இதுவரைக்கும் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருப்பது, சூப்பர்ஸ்டார் பட்டத்தின் மீது அவருக்கு ஆசை உள்ளது எனபது நிரூபனமாகியுள்ளது. இதனிடையே அண்மையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் என உறுதிப்படுத்தும் விதமாக முத்துவேல் பாண்டியனாக நடித்து அசத்தியுள்ளார்.

Also Read: விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

இந்த நிலையில் நடிகர் சத்யராஜிடம் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் அண்மையில் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு என்றுமே சரியானவர் ரஜினிகாந்த் தான் என்றும் அவருடைய பட்டத்துக்கு யாருமே போட்டியாக வரமுடியாது என்றும் தெரிவித்தார். தற்போது இவரது பேச்சு வைரலாகி வரும் நிலையில், 30 வருட பகை முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இதனிடையே மீண்டும் சத்யராஜ், ரஜினிகாந்தின் படங்களில் இணைந்து நடிப்பார் என அவர் பேசிய பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இப்படம் லோகேஷின் எல்.சி.யூ படம் என்பதால் இதில் சத்யராஜ் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: வாரிசு நடிகருக்காக சத்யராஜ் இறங்கி செய்த காரியம்.. பல வருடத்திற்கு பின்பு சம்பவம் செய்ய போகும் அம்மாவாசை

Trending News