திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

300 பேரை அழைத்து பாராட்டிய தளபதி.. அரசியல் ஆட்டம் ஆரம்பம், 2026ல் தட்டித் தூக்க பலே திட்டம்

தமிழகத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வர காத்திருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளாக தன்னுடைய ரசிகர் மன்றத்தை வைத்து சைலன்டாக பல வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. அதைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரசிகர் மன்ற இயக்கம் அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருக்கிறது. 

Also Read: இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

அது மட்டுமல்ல வரும் 2026 ஆம் ஆண்டு தளபதி விஜய் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கப் போகிறார். திடீரென்று இறங்கினால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதற்காக இப்போதிலிருந்து ரசிகர் மன்றத்தை வைத்து பல திட்டங்களை செய்ய பிளான் போட்டு இருக்கிறார். 

அதில் ஒன்றுதான் விஜய் ரசிகர் மன்ற இயக்கம் கொண்டு வந்த ‘விலையில்லா விருந்து திட்டம்’. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு தினம் தோறும் இலவசமாக உணவு  வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் களப்பணி ஆற்றுவதால் அவர்களை எல்லாம் சென்னையில் உள்ள பனையூரில் இருக்கும் விஜய்யின் வீட்டிற்கு அழைத்து பாராட்டி உள்ளார். 

Also Read: பிரம்மாண்ட நிறுவனம் உருவாக்கிய 5 முதல்வர்கள்.. ஜெயலலிதாவுடன் முடிந்ததை விஜய் தொடுவாரா.!

இந்த மீட்டிங்கில் தொடர்ந்து இந்த திட்டத்தை செய்யுங்கள். இதேபோன்று அடுத்தடுத்து பல திட்டங்களை கொண்டு வர  இருக்கிறேன். பண உதவி எவ்வளவு வேண்டுமானாலும் தன்னிடம் கேளுங்கள், தருகிறேன்.’ என்றும் விஜய் உறுதியளித்துள்ளார்.

இதனால் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் 2026ல் விஜய்யை களம் இறக்கி அரசியலில் ஆட்டம் காட்ட வேண்டும் என தீவிரமாக செயல்படுகின்றனர். இனி வரும் நாட்களில் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து மக்களின் மனதில் இடம் பிடிக்க போகின்றனர். இதற்காக விஜய்யும் பல கோடிகளை வாரி இறைக்க தயாராக இருக்கிறார். 

Also Read: தளபதியிடம் கெஞ்சி கேட்ட மாஸ்டர் மகேந்திரன்.. ரசிகனுக்காக செவி சாய்ப்பாரா விஜய்?

Trending News