புதன்கிழமை, ஜனவரி 15, 2025

35 வருட பகைக்கு பிள்ளையார் சுழி போட்ட நடிகை.. பிளேபாய் ரஜினியால் அவமானத்தின் உச்சத்திற்கு போன கட்டப்பா

Actor Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தான் ஆன்மிகம், உடல்நலம், விடாமுயற்சி என பயபக்தியுடன் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதிலும் அவர் செய்து வரும் சில விஷயங்களை மிகவும் வெளிப்படையாக, எந்த மேடையில் ஏறினாலும் தனது ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுரைகளை கூறிவருகிறார். உதாரணமாக அண்மையில் நடைபெற்ற ஜெயிலர் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், தயவு செய்து குடிப்பழக்கத்தை மட்டும் விட்டு விடுங்கள், அது மோசமானது என பேசினார்.

இதற்கான காரணம் சில வருடங்களுக்கு முன்பு வரை ரஜினிகாந்த் குடிப்பழக்கத்தில் அடிமையாகியிருந்தார். திருமணத்திற்கு பின்பும் இந்த பழக்கம் அவரை தொடர்ந்த நிலையில், தனது மனைவி தான் தன்னை இந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர செய்தார் என பேசினார். இப்படி ரஜினிகாந்திற்கு, சில வருடங்களுக்கு முன்பு வரை நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்து வந்ததையடுத்து , கிண்டல் செய்வது, நக்கல் அடிப்பது போன்ற பழக்கங்களும் அவருக்கு இருந்தது.

Also Read: ஆல் ரவுண்டராக கலக்கி வந்த சத்யராஜ்.. ஒரே படத்தால் மொத்த வாய்ப்பையும் தட்டிச் சென்ற நடிகர்

இந்த ஒரு பழக்கத்தால் தான் நடிகர் சத்யராஜுக்கும், ரஜினிக்கும் 35 வருடங்களுக்கு முன்பு பகை உருவான காரணமாகவும் அமைந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த், மாதவி, சுலோக்சனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி செம ஹிட்டான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் சத்யராஜை அவமானப்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தை ரஜினி செய்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாதவிக்கு தமிழ் அவ்வளவாக பேசவராது. இதன் காரணமாக இவர் எல்லோரிடமும் ஆங்கிலத்தில் தான் பேசி வருவாராம். அப்படித்தான் அந்த படப்பிடிப்பில் சத்யராஜை முதன்முறையாக பார்த்த மாதவி, அவர் யார் என ரஜினியிடம் கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் அவர் மிகப்பெரிய நடிகர், அதுமட்டுமில்லாமல் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமியில் ப்ரொபசராக உள்ளார் என ரஜினி விளையாட்டாக மாதவியிடம் கூறியுள்ளார்.

Also Read:  விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

உடனே மாதவியும் ரஜினி சொன்னதை நம்பி, சத்யராஜிடம் எதையாவது கத்துக்க வேண்டுமென்ற ஆசையில் அவரிடம் சென்று ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார். சத்யராஜுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வதென புரியாமல் திரு, திருவென முழித்துள்ளார். மேலும் சத்யராஜ், மாதவியிடம் ஆங்கிலத்தில் பேச முடியாமல் அவரை சமாளித்ததை பார்த்து ரஜினிகாந்த் விழுந்து விழிந்து சிரித்துள்ளார்.

அதன் பின்னர் அப்படத்தில் நடித்த நடிகை சுலோக்சனா, மாதவிடம் வந்து ரஜினி உங்களிடம் விளையாடியுள்ளார், சத்யராஜ் பிலிம் அகாடமியில் ப்ரொபசராக வேலை பார்க்கவில்லை என்று கூறி அவரை புரிய வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் சத்யராஜுக்கு, ரஜினி மேல் செம காண்டில் இருந்துள்ளார். ஒரு நடிகையின் முன்னாள் தன்னை இப்படி ரஜினி அவமானப்படுத்திவிட்டாரே என்ற எண்ணம் தான் சத்யராஜின் மனதில் 35 வருடங்கள் படிந்து பகையாக மாறும் அளவுக்கு இந்த சம்பவம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

Also Read: 30 வருட பகை, மீண்டும் ரஜினி படத்தில் சத்யராஜா.? ஒரே பேட்டியில் உச்சி குளிர வைத்ததால் கிடைத்த வாய்ப்பு

Trending News