புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அரண்மனை நான்காம் பாகத்தால் 4 பேருக்கு அடித்த ஜாக்பாட்.. தமன்னாவை விடாமல் துரத்தும் பாஃக் பேய்

சுந்தர் சியின் அரண்மனை நான்காம் பாகம் கிட்டத்தட்ட உலக அளவில் 97 கோடிகள் கலெக்சன் ஆனது. ஓடிடியிலும் பெத்த லாபம் பார்த்துள்ளது. செம குஷி மூடில் இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. குடும்பத்தோடு லண்டன் சென்று விட்டார். அடுத்தடுத்த படங்களுக்கு கதை தயார் பண்ணி கொண்டிருக்கிறார்.

தான் இயக்கிய படங்களாகிய கலகலப்பு, காபி வித் காதல் என இரண்டாம் பாகங்களை குறி வைத்த அவருக்கு பல பெரிய ஹீரோக்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இப்பொழுது இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, புது கதைகளை தயார் செய்து வருகிறார்.

அரண்மனை 4 படத்தை குடும்ப ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஹாரர் பட விரும்பிகளுக்கும் இது தீனி போட்டு உள்ளது. இப்பொழுது இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை மும்பையிலும் கொடி கட்டி பறந்து வருகிறது. மும்பையில் உள்ள ஒரு முக்கியமான ஆர்டிஸ்ட் இந்த படத்தை பார்த்து சுந்தர்சிக்கு ரீமேக் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த படத்தால் தமன்னாவின் மார்க்கெட் மும்பையில் கொடி கட்டி பறக்கிறது. ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருக்கும் தமன்னா தற்சமயம் அடுத்தடுத்து நிறைய ஹிந்தி படங்களை கமிட் செய்து வருகிறார். ஜான் ஆப்ரஹாமுடன் “வேதா” என்று ஒரு படத்தில் நடித்து வருகிறார்

தமன்னாவை விடாமல் துரத்தும் பாகு பேய்

அரண்மனை 4 ஆம் பாகத்தால், தமன்னா,மற்றும் ஒரு ஹீரோயினாக நடித்த ராசி கண்ணா, வி டிவி கணேஷ், சுந்தர் சி ஆகியோர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இயக்குவதை விட நடிப்பதற்கு சுந்தர் சிக்கு அழைப்புகள் வருகிறதாம். அடுத்தடுத்து தமன்னாவிற்கு பேய் படங்கள் வாய்ப்புகளே வருகிறதாம்.

தமன்னா சம்பளத்தை 4 கோடிகளில் இருந்து 6 கோடிகள் வரை உயர்த்தி விட்டார். இந்த சம்பளம் தமிழ் படங்களுக்கு மட்டும் தான். பாலிவுட்டில் நடிப்பதற்கு 8 கோடிகள் கேட்கிறாராம். அதைப்போல் காமெடியில் கலக்கிய யோகி பாபு மற்றும் வி டிவி கணேஷ் இருவரும் ஹிந்தியில் இதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Trending News