திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எம்ஜிஆர் எச்சரித்தும் கேட்காத 4 நடிகர்கள்.. கோபப்பட்டு ஒதுக்கி வைத்த ஹீரோ

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடன் பழகும் எல்லோரையும் நட்பு, உறவு போல தான் பார்க்கக் கூடியவர். அவர்கள் தனக்கு தெரிந்து கெட்ட விஷயங்களை நோக்கி சென்றால் உரிமையாக எச்சரிக்க கூடியவர். அவ்வாறு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக இருந்த நான்கு பிரபலங்களை எம்ஜிஆர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.

எஸ் ஏ அசோகன் : எம்ஜிஆர், சிவாஜி போன்றோர் படங்களில் வில்லனாக மிரட்டியவர் அசோகன். அதுவும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இவர் பேராசிரியர் பைரவனாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அசோகன் புகை பிடித்தலுக்கு அடிமையாக இருந்தார். எம்ஜிஆர் எவ்வளவோ சொல்லியும் அவர் இந்த பழக்கத்தை விடவில்லை.

Also Read : லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்

நாகேஷ் : ஒரு காலகட்டத்தில் நாகேஷின் கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் காத்துக் கிடந்தனர். அவ்வாறு கொடிகட்டி பறந்த நாகேஷ் குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவராம். எம்ஜிஆர் பலமுறை நாகேஷிடம் குடிப்பழக்கத்தை விட்டுவிடு என எச்சரித்து உள்ளார்.

தேங்காய் சீனிவாசன் : திறமைசாலியான நடிகர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். ஆனால் நாகேஷ் போல் தேங்காய் சீனிவாசனும் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்தார். இவரிடமும் பலமுறை எம்ஜிஆர் அறிவுரை கூறியுள்ளார்.

Also Read : எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிப்பதற்கு அடிமையாக இருந்தார். எம்ஜிஆர் எவ்வளவோ சொல்லியும் ரஜினி கேட்காமல் இருந்ததால் சில காலம் ரஜினியிடம் எம்ஜிஆர் பேசாமல் இருந்தார். அதன் பின்பு இருவரும் சமரசம் ஆனார்கள். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினி குடி மற்றும் புகைப்பிடித்ததை அடியோடு வெறுத்து விட்டார். அதுமட்டுமின்றி தன்னுடைய படங்களிலும் இது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்ற முடிவு எடுத்துள்ளார்.

Also Read : இரு மடங்கு எனர்ஜி காட்டும் ரஜினி.. வாரிசுகளால் வந்த விடிவு காலம்

Trending News