ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யையே மெர்சலாக்கிய 4 நடிகர்கள்.. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கிங்ஸ்லி

தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக புது புது கெட்டப்பில் முயற்சி செய்து வருகிறார் விஜய். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் தான் லியோ. இதனின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் படம் வெளிவரும் நாளை நோக்கி காத்திருக்கின்றனர். அவ்வாறு இருக்க இவர் விரும்பி ரசித்த காமெடிகள் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை முன்வைத்து வருகிறார். அந்த விதத்தில் இவரையே மெர்சலாக்கிய 4 முக்கிய நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: தளபதி 68ல் அந்த விஷயத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. டபுள் ஹேப்பி மூடில் வெங்கட் பிரபு

மன்சூர் அலிகான்: விஜய் தன் ஆரம்ப காலகட்டத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தும் அவ்வளவு பழக்கம் இல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் இவரின் வில்லத்தனம் இவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம். மேலும் சமீப காலமாக இவர் காமெடி கலந்த நடிப்பை வெளிகாட்டி வருவதால் இவரின் மீது நல்ல அபிப்பிராயம் வைத்து வருகிறார் விஜய். இதைத்தொடர்ந்து லியோ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெடின் கிங்ஸ்லி: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் தான் டாக்டர். இப்படத்தில் இன்வெஸ்டிகேட் பண்ணும் போலீஸ் ஆபீசராக இடம் பெற்று இருப்பார் பகத். இதில் இவரின் காமெடிகள் வேற லெவலில் இருக்கும். மேலும் விஜய் இந்த காமெடிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம். அதைத் தொடர்ந்தே விஜய் படமான பீஸ்ட்டில் இவரை நடிக்க வைத்தாராம்.

Also Read: லியோவை பான் இந்தியா படமாக உருவாக்க மறுத்த விஜய்.. மெய்சிலிர்க்க வைத்த தளபதியின் பதில்

சுனில் ரெட்டி: நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார் சுனில் ரெட்டி. அதை தொடர்ந்து மாஸ்டர், டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களில் இவரின் நகைச்சுவை சிறப்பாக அமைந்திருக்கும். அதிலும் டாக்டர் படத்தில் இவர் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் விஜய்க்கு மிகவும் பிடித்த ஒன்றாம். மேலும் இவருக்கு இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்கின்: சைக்கோ மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை இயக்குவதில் வல்லமை கொண்டவர் மிஸ்கின். பிசாசு 2 படத்தை இயக்கி வரும் நிலையில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவரின் படங்கள் என்றாலே விஜய்க்கு மிகவும் பிடிக்குமாம். அதைத்தொடர்ந்தே தற்போது லியோ படத்தில் இவரையும் நடிக்க வைத்தாராம் விஜய்.

Also Read: நிற்க நேரமில்லாமல் பறக்கும் விஜய் சேதுபதி.. விடாப்பிடியாய் நின்று கால்ஷீட்டை வாங்கிய இயக்குனர்

Trending News