செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

காதல் முதல் கல்யாணம் வரை மீனாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 4 ஹீரோக்கள்.. அரசியல்வாதிகிட்ட மாட்டிகிட்ட கொடுமை!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக வெற்றி பெற்றவர்கள் குறைவாகவே இருக்கின்றனர் அதில் முக்கியமானவராக நடிகை மீனா இருந்து வந்தார். இவர் இருந்த காலகட்டத்தில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் இப்போது வரை மீனாவை கொண்டாடும் ஒரு கூட்டம் இருந்து வருகிறது.

இவருக்கு நடிகர்களே ரசிகராக இருந்து வந்துள்ளனர் அதில் முக்கியமானவர் நடிகர் விஜய். இப்படி இருக்க மீனா பல நடிகர்களுடன் காதலில் ஈடுபட்டு திருமணம் வரை பேசப்பட்ட கிசுகிசுக்கப்பட்ட நடிகர்கள்.

மீனா- பிரபுதேவா 90களில் இணைந்து நடித்தனர் பொதுவாகவே பிரபுதேவா தன்னுடன் நடிக்கும் நடிகைகளை நடனத்தின் மூலம் தன் வசப்படுத்தி விடுவார். மீனா நன்றாக நடனம் ஆடக்கூடியவர் ஒரு சில படங்களில் இவருடன் நடித்ததால் இவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றது அப்பொழுது பிரபு தேவாவிற்கு திருமணம் ஆகி இருந்ததால் இது நடக்காமல் போய்விட்டது.

மீனா – கன்னட நடிகர் ரவிச்சந்திரன் இவர்களும் அந்த காலகட்டத்தில் ஒன்றாக நடித்ததால் மீனா இந்த நடிகரை காதலித்து வந்ததாகவும் அந்த நடிகரும் காதலித்து வந்ததால் திருமணம் நடக்கும் என பல வதந்திகள் அந்த காலகட்டத்தில் வந்தன. இந்த கிசுகிசுவை ஒரு முக்கியமான இன்னொரு கன்னட நடிகர் முறியடித்தாராம். மீனாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாராம். அவர்தான் சுதீப்

மீனா – சுதீப் இவர்கள் இருவரும் திருமணமே செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு காதலித்து வந்தனர். படங்களில் ஒன்றாக நடித்தனர் ஆனால் இதையும் மீனா தவிர்த்து அந்த காதலிலிருந்து வெளியேறி பலப்படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக காலகட்டம் அது.

மீனா- மோகன்லால் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்ததின் விளைவாக இவர்களும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்லும் என்றும் கூறப்பட்டது. முக்கிய காரணம் இவர்களது ஜோடி பொருத்தம் அவ்வளவு அழகாக இருக்கும். கடைசி வரை இவர்கள் இன்றும் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. பொதுவாகவே மீனாவுக்கு இது மாதிரி பல கிசுகிசுக்கள் வந்துள்ளன.

அரசியல்வாதிகிட்ட மாட்டிகிட்ட கொடுமை

என்ன கிசுகிசுகள் வந்தாலும் எதையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் தான் இருந்து வந்துள்ளது. இதையெல்லாம் பொய்யாகவே மாற்றிய ஒரே விஷயம் மீனா எதையும் கண்டு கொள்ள மாட்டார் நடிப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி நடித்து வந்ததால் அவரை இந்த கிசுகிசுக்கள் எதுவும் ஒன்றும் செய்யவில்லை.

அவர் நினைத்த மாதிரி வீட்டில் பார்த்த பையன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் அதற்கும் பிரச்சனை வந்துவிட்டது. தற்பொழுது மீண்டும் மீனா அரசியல் கட்சி பிரமுகர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்ற வதந்தியும் தற்பொழுது வந்து கொண்டிருக்கிறது.

Trending News