ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜெய்க்கு டாட்டா காட்டிய 4 நடிகைகள்.. டேட்டிங்கில் சோலியை முடித்த ராய்

4 actresses shown by Tata to Jai: பேச்சுக்கும், சிரிப்புக்கும், அழகுக்கும், நடிப்புக்கும் எந்தவித குறைச்சலுமே இல்லாமல் ரசிகர்களை கவரும் வகையில் இளம் ஹீரோவாக போராடி வருகிறார் நடிகர் ஜெய். இவருடைய படங்கள் வெற்றியோ தோல்வியோ ஆனால் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை தொடர்ந்து நிச்சயமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பல கிசுகிசுக்களில் இவருடைய பெயர் அடிபட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

இதனாலையே இவருக்கு பட வாய்ப்புகள் பறிபோய்விட்டது. அத்துடன் நடிப்பிலும் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இவருடைய திசையை மாற்றிக் விட்டார். இருந்தாலும் தற்போது அதிலிருந்து கொஞ்சம் மீண்டு நயன்தாராவுடன் அன்னபூரணி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த படம் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகாமல் போய்விட்டது.

இதற்கு இடையில் இவருடன் கிசுகிசுவில் சிக்கி நான்கு நடிகைகளின் கேரியரும் தற்போது தத்துளித்துக் கொண்டு வருகிறது. அதில் ஒருவர் தான் அஞ்சலி. ஆரம்பத்தில் இவருடைய நடிப்பை பார்க்கும் பொழுது ரொம்பவே துணிச்சலாகவும் இவரின் கதாபாத்திரம் தனித்துவம் வாய்ந்ததாக தேர்ந்தெடுத்து நடித்து மக்களிடம் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

Also read: ஜெய் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. இதற்கெல்லாம் காரணம் புண்ணியவதி நயன்தாரா தான்

ஆனால் போகப் போக இவருடைய மார்க்கெட் காலியாகும் அளவிற்கு ஜெயுடன் கண்ணா பின்னா என்ற சுற்றி அவருடன் காதலில் விழுந்து ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பல பேச்சுகள் அடிபட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் திருமணம் விரைவில் நடக்கும் என்று செய்திகள் வந்தது. இதனைக் கேட்ட அஞ்சலி என்னது திருமணமா என்றதும் ஜெய்க்கு டாட்டா காட்டிவிட்டு போய்விட்டார்.

அடுத்ததாக லக்ஷ்மி ராய், ஜெயுடன் நீயா 2 என்ற படத்தின் மூலம் இணைந்து நடித்திருக்கிறார். நிஜத்திலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து ஒருவரை ஒருவர் கழண்டு விட்டார்கள். அடுத்து சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு சீரியலில் இருந்து பட வாய்ப்பு பெற்று ஓரளவுக்கு புகழை சம்பாதித்தவர் தான் வாணி போஜன். இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கும் பொழுது ஒருவரை ஒருவர் காதலில் விழுந்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இவர்களுடைய சங்கதி வெளியே வந்த பிறகு வாணி போஜனுக்கு பட வாய்ப்பு குறைந்ததால் சுதாகரித்துக் கொண்டு ஜெயியே விட்டுவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக நடிகை சுர்பி. இவர்கள் இருவரும் சேர்ந்து புகழ் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒருவரை ஒருவர் ரொம்பவே நெருக்கமாகி இவர்கள் பெயர் கிசுகிசுவில் சிக்கப்பட்டது. தற்போது இந்த நடிகையின் நிலைமை என்னவென்றே கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

Trending News