திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிலுக்கின் காதல் வலையில் சிக்கிய 4 பிரபலங்கள்.. தாடிக்காரரால் மரணத்தை தழுவிய சோகம்

Silk Smitha: முன்னணி ஹீரோயின்களையே ஓரம் கட்டும் அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தவர் தான் கவர்ச்சி புயல் சில்க் ஸ்மிதா. இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும் அவருடைய வாழ்க்கை பற்றிய பல செய்திகள் இப்போதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவரின் வாழ்க்கையில் இருந்த சில ஆண்கள் பற்றிய விஷயம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது சில்க்கை பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதில் ஒட்டு மொத்த பேரும் சொல்லும் ஒரே விஷயம் இவர் சிலருடன் காதல் உறவில் இருந்தார் என்பதுதான். அந்த வகையில் 4 பிரபலங்கள் இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர்.

Also read: அந்த ஆளுக்கு கூட நடிக்க முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிய சில்க்.. கெஞ்சி கூத்தாடிய இயக்குனர்

அதில் இயக்குனர் வேலு பிரபாகரன் சில்க்குடன் தனக்கு இருந்த உறவு பற்றி வெளிப்படையாகவே பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சில காலங்களுக்குப் பிறகு அவரை பிரிந்த சில்க் எம் எஸ் விஸ்வநாதனின் மகன் கோபி கிருஷ்ணனுடன் காதலில் இருந்திருக்கிறார். ஆனால் எம்.எஸ்.வியின் குடும்பம் இதற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் இந்த காதலும் பாதியோடு முடிந்து போய் இருக்கிறது. இதற்கு நடுவில் சூப்பர் ஸ்டாருடனும் இவருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக அப்போதைய பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ரஜினியின் பல படங்களில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதும் பல்வேறு விதமாக கிசுகிசுக்கப்பட்டது.

Also read: அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என போட்டி போட்ட 5 நடிகைகள்.. அட எல்லாமே டி ஆர் கண்டுபிடிப்பு தான்!

இப்படி பல காதல்களை கடந்து வந்த சில்க் இறுதியாக தாடிக்கார டாக்டர் ஒருவரை தான் முழுதாக நம்பி காதலித்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்துடன் இருந்த அந்த டாக்டர் சில்க்கை தன் வசம் வைத்துக்கொண்டு அவருடைய சொத்துக்களின் பெரும் பகுதியை ஆட்டையை போட்டு இருக்கிறார். ஆனாலும் சில்க் அவரை முழுதாக நம்பி இருக்கிறார்.

அந்த வகையில் திரையில் கவர்ச்சிகரமாக நடித்தாலும் குடும்பம், குழந்தை என்று வாழ ஆசைப்பட்ட சில்க் இந்த தாடிக்காரரால் மன உளைச்சலுக்கு ஆளாகி பரிதாபமாக இறந்தது இன்று வரை நம்ப முடியாத அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆனால் இது தற்கொலையா, கொலையா என்று ரீதியிலும் சில விவாதங்கள் இப்போதும் எழுந்து வருகிறது.

Also read: திருமணத்திற்காக பிரபலத்திடம் கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்!

Trending News