நடிப்பை தாண்டி தியேட்டர் கட்டி லாபம் சம்பாதிக்கும் 4 பிரபலங்கள்.. பெரிய மால் ஆகிய சிவாஜியின் தியேட்டர்

பொதுவாகவே சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்திலிருந்து வருங்காலத்தில் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக ஏதாவது ஒரு முறையில் அதை சேமித்து வைப்பது அவர்கள் காலங்காலமாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த காலத்து டி ஆர் ராஜகுமாரி ஆரம்பித்த முதல் தொடக்கம் தான் தியேட்டர் ஆரம்பிப்பது.

இவர் 1941 ஆம் ஆண்டு சினிமாவிற்கு எண்ட்ரி ஆனதிலிருந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பழமை வாய்ந்த நடிகையாக பெயர் பெற்றார். அப்படிப்பட்ட இவர் நடிப்பின் மூலம் வந்த லாபத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த காலத்திலேயே ராஜகுமாரி தியேட்டர் என்று டி நகரில் கட்டி இருக்கிறார். ஆனால் காலப்போக்கில் அது தியேட்டரில் இருந்து மாரி பெரிய மாலாக தற்போது இருக்கிறது.

Also Read : எந்த மொழியா இருந்தாலும் ஒரே டேக் தான்.. சிவாஜியையே மிரள விட்ட நடிகை

இதனை அடுத்து சினிமாவிற்குள் நடிப்பு திலகமாக பெயர் பெற்ற சிவாஜி கணேசன். இவருக்கு தலைமுறை தலைமுறையாக பேர் சொல்லும் அளவிற்கு சொத்து சேர்த்திருந்தாலும் இதற்கு மிகப்பெரிய கனவாக கட்டினது தான் சாந்தி தியேட்டர். ஆனால் கொஞ்சம் வருடத்திலேயே தியேட்டர் விட அதிகமாக லாபம் வரும் கூடிய பெரிய ஆளாக மாற்றிவிட்டார்கள்.

அடுத்து நகைச்சுவை நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிய முதல் காமெடியன் நாகேஷ் தான். இவரும் நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் திரையரங்கே ஆரம்பித்த நிலையில் வெற்றிகரமாகவும் அது ஓடியது. அதன் பின் அந்த தியேட்டரை இடித்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது கல்யாண மண்டபமாக இருக்கிறது.

Also Read : நாகேஷ் நடித்து நங்கூரமாய் மனதில் நின்ற 5 கதாபாத்திரம்.. மறக்க முடியாத தருமி தாசன்

இவர்களைத் தவிர இதற்கு அடுத்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை வேறு யாரும் தியேட்டர் கட்டி வந்தவர்கள் என்று யாரும் இல்லை. இது மிகவும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது. ஆனால் தற்போது இதை முறியடிக்கும் விதமாக நடிகர் விஜய் அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார்.

அதாவது விருகம்பாக்கத்தில் நேஷனல் தியேட்டரை இடித்து தற்பொழுது பெரிய ஷாப்பிங் மாலாக இருப்பதில் திரையரங்கத்தை வைத்து நடத்தி வருகிறார் இது சினிமாவிற்கு மிகவும் ஒரு ஆரோக்கியமான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரை பார்த்த பிறகு தற்போது நயன்தாராவுக்கும் மற்றும் மற்ற நடிகர்களுக்கும் இதே ஆசை வந்துவிட்டது. அதற்கான முழு முயற்சியில் தற்போது நயன்தாரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : அஜித்தை பழிவாங்க நயன்தாரா எடுத்த புதிய முடிவு.. கெத்தை விட்டு மாஸ் ஹீரோவிடம் கேட்ட வாய்ப்பு