வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்துடன் சண்டை முத்தியதால் இப்ப வர ஒன்று சேராத 4 பிரபலங்கள்.. 21 வருடங்களாக ஓடாத வடிவேலு

4 Celebrities problem with Ajith: பொதுவாக அஜித்தின் குணம், நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கக்கூடியவர். எந்த வம்பு தும்புக்கும் யார் பிரச்சனையிலும் தலையிடாமல் இருக்க இடம் தெரியாமல் போய்விட வேண்டும் என்று நினைப்பவர். அப்படிப்பட்ட இவருடன் சண்டை  முத்தியதால் நான்கு பிரபலங்கள் இப்ப வரை ஒன்று சேராமல் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றும் என்ன பிரச்சனை என்பதையும் பார்க்கலாம்.

இயக்குனர் பாலா, இவரைப் பொறுத்தவரை இவர் எடுக்கக்கூடிய படங்கள் வெற்றியாகவும், விருது வாங்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று எதார்த்தத்தை தேடக்கூடியவர். அதனாலேயே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் காட்டாமல் கதைக்கு உயிரூட்டும் வகையில் எடுப்பார். அப்படி எடுக்கும் பொழுது யதார்த்தத்திற்காக ஹீரோக்களை படாத பாடு படுத்தி எடுத்துருவார். அப்படிப்பட்ட இவருடன் அஜித் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்கு இணைந்தார்.

அதற்காக பாலா சொன்னபடி நீண்ட முடி, தாடி மீசை என்று தோற்றத்தை மாற்றிவிட்டார் அஜித். அதன் பின் ஒரு கட்டத்தில் பாலாவுக்கும் அஜித்துக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் இந்த ப்ராஜெக்டில் இருந்து அஜித் விலகி விட்டார். அதன் பின்னரே ஆர்யா நடித்தார். இதற்கிடையில் இப்படத்தை பைனான்ஸ் செய்த அன்பு விடம் ஒரு பிரச்சினை அஜித்திற்கு ஏற்பட்டது.

Also read: அஜித்தின் உதவி, வெளிய தெரியாமல் போக காரணம்.. இவர கிண்டல் பண்ண எப்படியா மனசு வருது!

அதாவது இந்த படம் ஆரம்பிக்கும் பொழுது அஜித்துக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் ஆக பாலா, அன்பு விடம் இருந்து வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் அஜித்துக்கும் பாலாவுக்கும் விரிசல் ஏற்பட்டதால் வாங்கி கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்று மிரட்டும் விதமாக அஜித்தை தகாத வார்த்தையால் பேசியிருக்கிறார். இதனாலையே அன்பு செழியன் மற்றும் பாலாவிடம் மோதல் ஏற்பட்டு விட்டது.

அடுத்ததாக ராஜு மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணியது கலைப்புலி எஸ் தாணு. அப்பொழுது அஜித்துக்கு எதிர்பாராத விதமாக ஒரு ஆக்சிடென்ட் ஏற்பட்டதால் உடனே கலைப்புலி அஜித்துக்கு பதிலாக வேற ஹீரோவை வைத்து படம் எடுக்கலாம் என்று இயக்குனரிடம் பிரச்சனை செய்திருக்கிறார். இதனால் அஜித்துக்கும் கலைப்புலி தாணுவிற்கும் வாக்குவாதம் ஆகி மோதல் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்து வடிவேலு உடன் இணைந்து ராஜா படத்தில் நடிக்கும் போது அஜித்தை அவமரியாதையாக பேசியதை தொடர்ந்து இனி வடிவேலுடன் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறார். அதனால் கிட்டத்தட்ட 21 வருடங்கள் ஆகியும் இன்னும் வரை இவர்கள் கூட்டணி ஒன்று சேராமல் இருக்கிறது. இப்படி அஜித்துடன் இந்த நான்கு பிரபலங்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே இந்த நான்கு பேரை அஜித் ஒதுக்கி விட்டார்.

Also read: அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

Trending News