சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹீரோக்களால் பட்ட அவமானத்தால் தாங்களே நடிக்க வந்த 4 இயக்குனர்கள்.. ரஜினியால் கிடைத்த டி.ராஜேந்தர்

Rajinikanth-T.Rajenthar: இயக்குனர்கள் பலர் தற்போது நடிகர்களாக மாறிவிட்டார்கள். ஒரு சிலர் நடிக்க பிடித்து ஸ்கிரீனுக்கு முன்னால் வந்திருந்தாலும், ஒரு சிலரோ நம் கதையை தூக்கிக் கொண்டு மற்ற ஹீரோக்கள் பின்னால் சுற்றுவதை விட, அந்த கதையில் நாமே ஹீரோவாக நடித்து விடலாம் என்ற முடிவுடன் ஸ்கிரீனுக்கு முன் வந்தவர்கள் தான். இந்த நான்கு இயக்குனர்கள், தங்களுடைய கதைகளை ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்ததால் அவர்களே அந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

டி.ராஜேந்தர்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல் வரிகள், ஒளிப்பதிவு என தன்னுடைய படத்திற்கு தேவையான அத்தனை வேலைகளையும் செய்பவர் தான் டி ராஜேந்தர். இவருக்கு மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது உயிருள்ளவரை உஷா தான். இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ரஜினிகாந்த் தானாம். ரஜினி இந்த படத்தில் நடிக்க மறுத்ததால், ராஜேந்தர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

சேரன்: பொற்காலம் மற்றும் பாண்டவர் பூமி படங்களின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன். அவருக்கு மிகப்பெரிய விருப்பத்தை கொடுத்த படம் என்றால் ஆட்டோகிராப். ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடந்து சென்ற காதல்களை பசுமை மாறாது சொல்லி இருப்பார். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய். அவர் ரிஜெக்ட் செய்ததால், சேரன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்தார்.

எஸ்.ஜே.சூர்யா: விஜய் மற்றும் அஜித்திற்கு குஷி, வாலி என்ற பெரிய ஹிட் படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா பல வருடங்களுக்குப் பிறகு நியூ படத்தில் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தில் முதன் முதலில் அஜித் மற்றும் ஜோதிகா தான் நடித்தனர். ஒரு சில காரணங்களால் இருவருமே படத்தில் இருந்து விலகி விட்டனர். அதன் பின்னர் சூர்யாவே ஹீரோவாக மாறி, தன்னுடைய முதல் பட ஹீரோயினான சிம்ரன் உடன் இணைந்து இந்த படத்தில் நடித்தார்.

ராம்: சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தங்க மீன்கள். இந்த படத்தில் வரும் ஆனந்த யாழை பாடல் கூட இன்றுவரை ரசிகர்களில் பேவரைட் ஆக இருக்கிறது. அப்பா மகளுக்கு இடையேயான காதலை அழகாக சொன்ன இந்த படத்தில் இயக்குனர் ராம் ஹீரோவாக நடித்தார். பல முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்கள் ரிஜெக்ட் செய்ததால் அவரே நடித்து விட்டார்.

இந்த நான்கு இயக்குனர்களும் ஏதோ ஒரு கோபத்தில் ஹீரோவாக மாறி இருந்தாலும், நடிப்பில் சோடை போகவில்லை. அதிலும் எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிப்பு அரக்கனாக இருக்கிறார். இவர் நடித்தாலே படம் ஹிட்டு தான் என இப்போது ஆகிவிட்டது. சமீபத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்களை இன்னும் அதிகமாகவே கவர்ந்து விட்டார்.

Trending News