தான் வைத்திருக்கும் கதைக்கு ஏற்ப கதாநாயகனை தேர்ந்தெடுக்கும் உரிமை இயக்குனர்களுக்கு உண்டு. அதை தொடர்ந்து அக்கதையை கேட்டுவிட்டு நம் இமேஜிற்கு இந்த கேரக்டர் சரி வருமா என்பதை யோசித்து தீர்மானிப்பார்கள் ஹீரோக்கள். இது இரண்டும் ஒற்றுப் போனால் தான் படப்பிடிப்பை தொடங்குவார்கள்.
இந்நிலையில் ஒரு சில சூழ்நிலையை பொறுத்து கதை கேட்டு ரஜினியால் ஒதுக்கப்பட்ட இயக்குனர்கள் ஏராளம். இது அவரின் அனுபவத்தை குறிக்கிறது. இது போன்ற காரணத்தால் ரஜினி ரிஜெக்ட் செய்த 4 இயக்குனர்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: அஜித்தை பழிவாங்க நயன்தாரா எடுத்த புதிய முடிவு.. கெத்தை விட்டு மாஸ் ஹீரோவிடம் கேட்ட வாய்ப்பு
வெங்கட் பிரபு: மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் தான் வெங்கட் பிரபு. இவர் தன் மாநாடு படத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டாருக்கு இரண்டு கதைகள் சொல்லி இருக்கிறாராம். ஆனால் அக்கதை கேட்ட ரஜினி சில காரணத்தால் படங்களை ரிஜெக்ட் செய்துள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும் அதை தொடர்ந்து அவர் மேற்கொண்ட படங்கள் வெற்றி கண்டது. தற்போது ரஜினிக்கு சொன்ன கதையை ஏற்று தளபதி 68ல் நடிக்க இருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபி சக்கரவர்த்தி: 2022ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படமான டான் படத்தை இயக்கியவர் தான் சிபி சக்கரவர்த்தி. இவர் ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு அவரிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் அக்கதையை ரஜினி நிராகரித்ததால், ஹீரோவை தேடி அக்கட தேசம் வரை சுற்றி வருகிறாராம். மேலும் இதன் காரணமாகவே யாரும் தமக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனவும் வேதனைப்படுகிறார் சிபி சக்கரவர்த்தி.
Also Read: நடிப்பை தாண்டி விவசாயம் செய்யும் 5 நடிகர்கள்.. ரஜினி கூப்பிட்டு பாராட்டிய கபாலி கிஷோர்
ஜித்து ஜோசப்: மலையாள இயக்குனரான இவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாபநாசம். கமலின் நடிப்பில் வெற்றி கண்ட இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இருப்பினும் முதலில் இப்படத்தில் ரஜினி தான் நடிப்பதாக இருந்ததாம். அதை தொடர்ந்து கதை கேட்ட பிறகு ரஜினி நிராகரித்ததால் அதன்பின் கமலை அணுகி ஒப்புதல் பெற்றாராம் இயக்குனர் ஜோசப். இதை அறிந்த கமல் இப்படத்திற்கு கூடுதல் சம்பளத்தை பெற்று தான் இப்படத்தை நடித்ததாக கூறினார் இயக்குனர்.
எச் வினோத்: தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் தான் எச் வினோத். இவரின் தொடர் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இதை தொடர்ந்து ரஜினி அவர்களை வைத்து படம் எடுக்க போவதாக கூறி வருகிறார். ஆனால் அதற்கான நேரம் சரியாக அமையாததால் தடைப்பட்டு கொண்டே செல்கின்றது. இனிவரும் காலங்களில் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: கமலை விட 99% வெற்றி படங்களை கொடுத்த ரஜினி.. இந்த ஒரு விஷயத்தால் சரிந்த மார்க்கெட்