வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தம்பிக்கு ஹிட் கொடுத்து அண்ணனை கதறவிட்ட 4 இயக்குனர்கள்.. சிறுத்தை சிவா தலையை உருட்டும் ரசிகர்கள்

Kanguvaa: வாரிசு நடிகர்களாக இருப்பது எப்போதுமே ரொம்ப கஷ்டம். அப்பா ஜெயித்து மகன் ஜெயிக்கவில்லை என்றாலும், அம்மாவை பின் தொடர்ந்து மகள் சினிமாவுக்கு வந்து தோற்றுப் போனாலும் அது பெரிய அளவில் பேசப்படும்.

அதேபோன்றுதான் அண்ணன் தம்பி, அக்கா தங்கை சினிமாவில் இருப்பது. அந்த காலத்தில் அம்பிகா ராதா இருவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தனர். ஆனால் ராதாவின் மகள்கள் கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயருக்கு அந்த மாதிரி சினிமா கை கொடுக்கவில்லை.

அதேபோன்றுதான் நடிகர் சூர்யா டாப் ஹீரோக்களின் லிஸ்டில் வளர்ந்து வரும் போதே அவருடைய தம்பி கார்த்தி சினிமாவுக்குள் வந்தார். சூர்யா அத்தனை வருடம் நடித்து சம்பாதித்த புகழை பருத்திவீரன் என்ற ஒரு படத்தில் தட்டி தூக்கினார் கார்த்தி.

மாடர்ன் சினிமாவாக இருக்கட்டும், வில்லேஜ் சப்ஜெக்ட்டாக இருக்கட்டும் கார்த்தியை அடித்துக் கொள்ள முடியாது. கார்த்தி கமர்சியல் ஹீரோவாக வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போதே சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற கதை களங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். கார்த்திக்கு சூப்பர் ஹிட் கொடுத்து சூர்யாவுக்கு, பிளாப் படங்களை கொடுத்த இயக்குனர்கள் நான்கு பேரை பற்றி பார்க்கலாம்.

அண்ணனை கதறவிட்ட 4 இயக்குனர்கள்

லிங்குசாமி: ஆனந்தம், ரன் படங்களுக்கு பிறகு இயக்குனரில் லிங்குசாமிக்கு பெரிய அளவில் கை கொடுத்த படம் தான் பையா. கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் இந்த படம் பெரிய அளவில் கிட்ட அடித்தது. ஆனால் லிங்குசாமிக்கும் சூர்யாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இவர்களுடைய கூட்டணியில் உருவான அஞ்சான் படம் படுதோல்வி அடைந்தது.

செல்வராகவன்: செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிவிட்டது. என்னதான் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் படம் இன்று வரை சினிமா ரசிகர்களின் மனதில் நிலையாக நிற்கிறது. ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த NGK படம், இது நிஜமாகவே செல்வராகவன் படம் தானா என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவுக்கு இருந்தது.

பாண்டிராஜ்: நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் முக்கியமான படங்கள் என்றால் அதில் கடைக்குட்டி சிங்கமும் ஒன்று. பல வருடங்களுக்குப் பிறகு நல்ல ஃபேமிலி சப்ஜெக்ட் உடன் வந்து இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டியராஜுடன் இணைந்து சூர்யா பணியாற்றிய எதற்கும் துணிந்தவன் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

சிறுத்தை சிவா: கார்த்தி காமெடி மற்றும் ஆக்சன் இரண்டிலும் பட்டையை கிளப்பிய படம் சிறுத்தை. இந்த படம் இயக்கியதால் தான் இயக்குனர் சிவாவிற்கு சிறுத்தை சிவா என்ற பெயர் வந்தது. அதன் பின் அஜித்துடன் பல படங்களில் இணைந்து பணியாற்றினார். இவருடைய இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் இதுவரை வரவில்லை.

Trending News