வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரிலீசுக்கு தயாரான ஐஸ்வர்யா ராஜேஷின் 4 படங்கள்.. நயன்தாரா இல்லாத இடத்தை நிரப்புறாங்க போல

சிறிய கேரக்டராக இருந்தாலும் படத்தில் தன்னுடைய கேரக்டருக்கும், கதைக் களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், 4 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

தற்போது கோலிவுட்டில் அதிக படங்களை நடித்து வரும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், படங்களில் மட்டுமல்ல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூழல் வெப் சீரிஸ் அனைவரது கவனத்தையும் பெற்றது.

Also Read: நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட கண்டிஷன்.. இப்படியே போனால் ஹீரோக்களின் நிலைமை

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த’ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது..

இதைத்தொடர்ந்து இரண்டாவதாக விஷ்ணு விஷால் உடன் ‘மோகன்தாஸ்’ என்ற படமும், அதைத்தொடர்ந்து இயக்கத்தில் கின்ஸ்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கிறது.

Also Read: உன் கூட அடுத்த படமா? தனுசுக்கு எந்த நடிகை மீது ஆசை, மேடையில் போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

இவற்றைப் போலவே ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ஷூட்டிங்கும் தற்போது நிறைவடைந்து அந்தப் படமும் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. மேலும் அர்ஜுனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தீயவர் குறைகள் நடுங்க’ என்ற படமும் முழுமையாக தயாராகி ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த நான்கு படங்களும் தீபாவளியை அடுத்து ரிலீஸ் ஆக்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நான்கு படங்களையும் முடித்த கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Also Read: சொல்லவே இல்லை.. ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவும், தாத்தாவும் பிரபல நடிகர்களா!

Trending News