வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

செப்டம்பர் 27 குறி வைத்து வெளியாகும் 4 படங்கள்.. பொன்னியின் செல்வன் நாயகன்களுடன் மோதும் கவின்

Kavin : பெரிய நடிகர்களின் படங்கள் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ரிலீசாவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 27 புனித வெள்ளி தொடர் விடுமுறையை முன்னிட்டு பெரிய நடிகர்களின் நான்கு படங்கள் வெளியாகிறது.

இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவினின் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ப்ளடி பெக்கர்.

இதில் கவினின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வன் நாயகர்களின் படங்களும் வெளியாகிறது. அதாவது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படம் உருவாகி இருக்கிறது.

செப்டம்பர் 27 வெளியாகும் 4 படங்கள்

ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செப்டம்பர் 27ஆம் தேதி இந்த படங்களுடன் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் படமும் வெளியாகிறது.

இந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளனர். மேலும் இது தவிர ஜூனியர் என்டிஆரின் தேவரா படமும் இதே நாளில் வெளியாகிறது. ஒரே நாளில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால் எந்த படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி படங்கள் சமீபகாலமாக பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படங்களை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். அதோடு தொடர்ந்து கவின் சினிமாவில் ஸ்கோர் செய்து வரும் நிலையில் ப்ளடி பெக்கர் அவருக்கு ஒர்க் அவுட் ஆகிறதா என்பதை பார்ப்போம்.

சினிமாவில் வளர்ந்து வரும் கவின்

Trending News