வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

This week OTT Release Movies: வாரம் ஒரு முறை எத்தனையோ படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. என்னதான் நல்ல கதையுடன் படங்கள் வெளிவந்திருந்தாலும் அனைத்து படங்களையும் நாம் திரையரங்குகளில் போய் பார்க்க முடியாது. அதற்காகத்தான் திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இந்த வாரம் வெளிவர இருக்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம்.

ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது. அதாவது மே மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பல எதிர்ப்புகளையும் தாண்டி பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படம் நாளை சோனி லிவ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

Also read: ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வைதேகி காத்திருந்தாள்

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்: இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் சோடை போனது. அதனால் ஓடிடி-யில் நாளை ஜீ5  வெளிவர இருக்கிறது.

டக்கர்: இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், விக்னேஷ், யோகி பாபு இவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படம் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. தற்போது இப்படம் நெட்ஃபிக்ஸ்-யில் நாளை வெளிவர இருக்கிறது.

Also read: Takkar Movie Review- பணக்காரராக ஆசைப்பட்ட சித்தார்த்தின் பாதை மாறிய பயணம்.. டக்கர் படத்தின் முழு விமர்சனம் இதோ!

அடுத்ததாக திரையரங்குகளில் வெளிவரும் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல வெப் சீரிஸ்களிலும் நல்ல படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அமேசான் பிரைமின் ஒரிஜினல் சீரியஸான “ஸ்வீட் காரம் காபி” இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இதில் லட்சுமி,மதுபாலா, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள், இப்படம் பேமிலி செண்டிமெண்ட் படமாக வந்திருக்கிறது, இந்த வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி-யில் நாளை வெளிவர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஆங்கிலத்தில் 65 மூவிஸ், தி அவுட் லாஸ், கோல்ட் பிரிக் ஆகிய திரைப்படங்கள் நெட்ஃபிக்ஸ்-யில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த வாரம் திரையரங்குகளில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆர்யாவின் நடிப்பில் உருவாகும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.. இணையத்தில் மிரட்டும் டீசர்

Trending News