திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமா நிழல் கூட வேண்டாம் என வாரிசுகளை தவிர்க்கும் 4 ஹீரோக்கள்.. மணிரத்தினம் கூப்பிட்டும் மறுத்த மாதவன்

Actor Madhavan: அன்று முதல் இன்று வரை வாரிசு  நடிகர்களும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்று தான் வருகின்றனர். இந்நிலையில் பிரபலமான இயக்குனரின் அழைப்பையும் ஏற்க மறுத்த ஹீரோக்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தன் திறமையாலும், நடிப்பாலும் வெற்றி படங்களை கொடுத்த பிரபலங்களின் மகன்களை எப்படியாவது சினிமாவில் இழுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

Also Read: அடிமடியில் கை வைத்த தளபதி.. 2026 தேர்தலுக்கு இப்பவே போட்ட அடித்தளம்

அவ்வாறு பிரம்மாண்டத்தின் இயக்கத்திற்கு பெயர் பெற்றவர் தான் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மாபெரும் புரட்சியை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் இவர் 2000 தில் தமிழில் இயக்கி வெளிவந்த அலைபாயுதே என்னும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் மாதவன்.

அவ்வாறு தன்னால் அறிமுகமான மாதவனிடம், அவரின் மகன் வேதாந்த் சினிமாவிற்கு வருவது குறித்து கேட்டுள்ளார். அதற்கு தன் மகன் நீச்சல் விளையாட்டில் ஆர்வமாக இருப்பதால், இது போன்ற சினிமா வாய்ப்புகளை மறுத்து வருகிறார் மாதவன்.

Also Read: சினிமாவில் ரொம்ப லேட்டா ஜெயித்த 5 காமெடி நடிகர்கள்.. வடிவேலு ரெட் கார்டுக்கு பின் வளர்ந்த சுவாமிநாதன்

அதைத்தொடர்ந்து அரவிந்த்சாமியின் மகனான ருத்ரசாமி தன் படிப்பினை முடித்துள்ள நிலையில் அவரையும் சினிமாவிற்குள் கொண்டுவர பேச்சு அடிபட்டு வருகிறது. இருப்பினும் அதில் தனக்கு நாட்டம் இல்லை என கூறிவிட்டாராம் அரவிந்த்சாமி.

அதேபோல் பிரபல வில்லனான ரகுவரனின் மகன் தற்பொழுது மேற்படிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் சினிமா பயணம் குறித்து இப்போதைக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லை என ரோகிணி தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ராஜ்கிரண் மகனான நைனார் முஹம்மத் என் ராசாவின் மனசிலே 2 படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை வந்துள்ள நிலையில் அதில் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார் ராஜ்கிரண். இதுபோன்று சினிமாவின் நிழல் கூட வேண்டாம் என ஹீரோக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.

Also Read: 5 டாப் நடிகர்களுக்கு ரெட் கார்ட்.. சேட்டையை ஓரம் கட்டினாலும் சிம்புவை விடாமல் துரத்தும் பிரச்சனை

Trending News