தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவராக இருக்கக் கூடியவர் தான் இயக்குனர் சங்கர். தற்பொழுது சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது இவரின் பிரமாண்டமான இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ஆரம்ப கால கட்டங்களில் இயக்குனர் சங்கரின் படங்களையே சில நடிகர்கள் தங்களின் சூழ்நிலை காரணமாக நிராகரித்துள்ளனர். அப்படியாக சங்கரை மதிக்காமல் அலையவிட்ட 4 ஹீரோக்களை பற்றி இங்கு காணலாம்.
சரத்குமார்: சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் மதுபாலா நடிப்பில் உருவான திரைப்படம் ஜென்டில்மேன். மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சரத்குமார் தான். ஆனால் இயக்குனர் குரு பவித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால், அந்த படத்திற்காக மீசை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் சரத்குமார் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: ஒத்த வார்த்தையில் மொத்த சோழிய முடித்த பிரபல பத்திரிக்கை.. பெரிய அவமானத்தை சந்தித்த சங்கர்
அப்பாஸ்: 1994 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் உருவான திரைப்படம் காதலன். இதில் பிரபுதேவா உடன் நக்மா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதைக்கு ஏற்றபடி முதலில் வேறு ஒரு ஹீரோவை தான் தேடி வந்தார் இயக்குனர். அந்த வகையில் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸ்க்கு தான் முதலில் இப்படத்தில், பிரபுதேவா நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டார்.
மாதவன்: 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் நண்பன். இதில் விஜய் உடன் ஜீவா, ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் 2009 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். முதலில் ஹிந்தியில் நடித்த மாதவனை தான் சங்கர் தனது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் மாதவன் அதனை நிராகரித்து விட்டார்.
Also Read: தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைத்த சங்கர்.. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்
பிரகாஷ்ராஜ்: 2015 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் ஐ. இதில் விக்ரம் உடன் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் மருத்துவராக நடித்துள்ள வாசுதேவன் என்னும் வில்லன் கதாபாத்திரம், முதலில் பிரகாஷ்ராஜிற்கு தான் வந்தது. ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இவ்வாறு இந்த 4 நடிகர்களும் இன்றைய சினிமா துறையில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும், ஷங்கரின் படங்களையே ஆரம்ப காலகட்டத்தில் நிராகரித்துள்ளனர். அதிலும் ஆண் ரசகுல்லாவாக பெண்களின் மனதில் இடம்பிடித்த அப்பாஸ் இன்று தனது சினிமா கேரியறையே தொலைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
Also Read: மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்