செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தளபதி 68ல் விஜய் தங்கச்சியாக சாய்சில் இருக்கும் 4 நடிகைகள்.. கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சீக்ரெட்ஸ்

Thalapathy 68 update: ஏ ஜி எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தளபதி 68 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல் மே 21, 2023 ஆகும். தற்போது இயக்குனரும் விஜய்யும் USA சென்று இருப்பதாக தகவல் வெளியானது.

இத்திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு 3d, வி எப் எக்ஸ் ஸ்கேன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என நினைத்தார். அதற்காக தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லேப் சென்று இருக்கிறார்கள். இதற்கு முன்பே இந்த தொழில்நுட்பம் ஷாருக்கான் திரைப்படத்திலும், தமிழில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்திலும் பயன்படுத்தி உள்ளனர்.தற்போது வரை கிடைத்த தகவலின் படி ஜெய் மற்றும் பிரபுதேவா இணைந்து உள்ளனர். பிறகு இத்திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடிப்பதற்கு சில நடிகைகள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றார்கள். அதில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என சீக்ரேட்டையும் தெரிந்து கொள்ளலாம்.

Also Read:பணத்திமிரில் திருமணத்தை தாண்டி அந்தரங்க உறவு.. நடிகையை சந்தி சிரிக்க வைத்த சம்பவம்

ஐஸ்வர்யா ராஜேஷ்: வடசென்னை திரைப்படத்தில் தனது துணிச்சலான பேச்சில்  யார் இந்த நடிகை என ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரும் இந்த திரைப்படத்தில் தளபதிக்கு தங்கையாக நடிக்க வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ஒருவர். இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தீயவர் கொலை நடுங்க என்னும் திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் உடன் நடித்து வருகிறார். இவருக்கு வாய்ப்பு கிடைக் குமா இல்லையா பார்க்கலாம்.

மகிமா நம்பியார்: மகிமா நம்பியாரும் இந்த லிஸ்டில் ஒருவர். தற்போது வரை இவர் இன்னும் தளபதி உடன் நடிக்கவே இல்லை. இந்த சான்ஸ் கிடைத்தால் நல்லா இருக்கும் என நினைத்திருக்கிறார் . இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் தமிழில் சாட்டை திரைப்படத்தில் “அறிவழகி” என்னும் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்திலும் நடித்துள்ளார்.  ரத்தம் என்னும் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:மாமனார், மருமகன் இடையே நடக்கும் போட்டி.. ஒரே நடிகரை டார்கெட் செய்யும் ரஜினி, தனுஷ்

துப்பாக்கி சஞ்சனா: துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் தான் சஞ்சனா. இவர் இதற்கு முன்பே வழக்கு எண் 18/9 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு தோழியாக நடித்துள்ளார். இவரும் இந்த லிஸ்டில் ஒருவராக தற்போது வரை சாய்சில் இருக்கிறார். இவர் ஏற்கனவே தளபதிக்கு தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இவருக்கு கிடைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

அபர்ணா தாஸ்: தளபதியின் பீஸ்ட் திரைப்படத்தில் அபர்ணாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அபர்ணாதாஸ். பிறகு “டாடா” எனும் திரைப்படத்தில் கவின் உடன் கதாநாயகியாக நடித்தார்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரும் இந்த தங்கை  வாய்ப்புக்காக லிஸ்டில் இருக்கும் ஒருத்தர். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி அபர்ணாதாஸ் தான் இந்த தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அபர்ணா அவரின் ட்விட்டர் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் இந்த திரைப்படத்தில் அனைவரோடும் இணைந்து வேலை செய்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read:வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்..

Trending News