செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மற்ற நடிகைகளுக்காக பாடகியாக மாறிய 4 ஹீரோயின்கள்.. லட்சுமி மேனனை குத்தாட்டம் போட வைத்த ரம்யா நம்பீசன்

நடிகைகள் படங்களில் நடிப்பதை காட்டிலும், நடனம் ஆடுவது, சண்டை காட்சிகளில் சிறந்து விளங்குவது, கவர்ச்சியில் கிறங்கடிப்பது என பல திறமைகளை வளர்த்துக்கொள்வர். ஆனால் சில நடிகைகளுக்கு மட்டுமே பாடல் பாடுவதிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த சாமி 2 படத்தில் மெட்ரோ ரயில் பாடலை பாடினார்.

அதே போல, நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் அஜித் நடிப்பில் ரிலீசான துணிவு படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா பாடலில் பாடியிருப்பார். மேலும் சிட்டிசன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை வசுந்தரா தாஸ், அப்படத்தில் பூக்காரா உள்ளிட்ட பல பாடல்களை பாடினார். அப்படி தமிழ் சினிமாவில் தங்கள் படங்களில் பாடல் பாடிய நடிகைகள் இருந்தாலும், மற்ற நடிகைகளுக்காக பாடல் பாடிய 4 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also Read: இரண்டு அருவருப்பான கேள்விக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்.. நல்லவேளை அடி வாங்காம தப்பித்த நபர்

ஸ்ருதிஹாசன்: உலகநாயகன் கமலஹசானின் மூத்த மகளான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் வானம் எல்லை பாடல் பாடி பிரபலமான இவர், தொடர்ந்து அவர் நடித்த 3 படத்திலும் பாடியுள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மான் காத்தே படத்தில் நீ தினம் சிரிச்சா போதுமே பாடலில், ரொமான்டிக் குரலில் ஸ்ருதிஹாசன் பாடியிருப்பார்.

லட்சுமி மேனன்: கும்கி படத்தின் மூலமாக அறிமுகமான இவர், பரதநாட்டிய கலைஞர் ஆவார். பல வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த லட்சுமி மேனன் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் விமல், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்கற குக்குற என்ற ஐட்டம் சாங் ஒன்றை பாடியிருப்பார். இப்பாடலில் நடிகை இனியா நடனமாடிய நிலையில், லட்சுமி மேனனின் குரல் பலரையும் கிண்டலடிக்க வைத்தது.

Also Read: ஹீரோயின்களுக்காகவே இப்பவும் மறக்க முடியாத 5 இன்ட்ரோ சாங்ஸ்.. உலக அழகிகாகவே எழுதப்பட்ட அந்த ஹிட் பாடல்

ரம்யா நம்பீசன்: தமிழில் ஒரு நாள் கனவு திரைப்படத்தின் முலமாக அறிமுகமான இவர், குள்ளநரி கூட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா நம்பீசன், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பாடியுள்ளார். இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு பாடத்தில் ஃபை ஃபை ஃபை பாடலை பாடியிருப்பார். லட்சுமி மேனன் இப்பாடலில் குத்தாட்டம் போட்ட நிலையில், பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது.

ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா பாடகியாக சினிமாவில் கால்பதித்து இன்று தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார். இவர் ஹீரோயினாக மாறிய பின் பல படங்களில், பல நடிகைகளுக்காக பாடியுள்ளார். அதிலும் கடந்தாண்டு புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடிய நிலையில், சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கிறங்கடித்திருப்பார்.

Also Read: வெற்றிமாறனிடம் இருந்த கெட்ட பழக்கம்.. தெரியாமல் மாட்டிக் கொண்டு கண்ணீர் விட்ட ஆண்ட்ரியா

Trending News