ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஷாருக்கான் வரை புகழ்பெற காரணமாய் இருந்த அட்லீயின் 4 படங்கள்.. விஜய்யை விட்டுக் கொடுக்காத பாசமலர்!

4 hit movies of Atlee that impress Shah Rukh Khan: தமிழ் சினிமாவில் தான் இயக்கிய அத்தனை படங்களையும் மாபெரும் வெற்றி பெற வைத்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கானை தன் பக்கம் ஈர்த்தவர் அட்லீ. பாலிவுட்டில் இவரது அறிமுக திரைப்படமான ஜவான் உலக அளவில் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. 

இன்னும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஹாலிவுட்ல இருந்து  கண்டிப்பாக அழைப்பு வரும் என்று தன்னம்பிக்கையோடு இருக்கும் அட்லீயின் 4 வெற்றி படங்களை காணலாம். 

ராஜா ராணி: குறும்படங்களை இயக்கிய அட்லீக்கு, ஷங்கரின் உதவி  இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. எந்திரனில் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில் வழக்கமான காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் கூறி தமிழ் ரசிகர்களின் மனதை வென்றெடுத்தார்.

ஷாருக்கானுக்கு ரொம்ப பிடித்த அட்லியின் 2 படங்கள்

தெறி: அட்லீ மற்றும் விஜய் இணைந்த முதல் திரைப்படம் தெறி.  நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தன் மகளை மனிதாபிமானத்துடன் வளர்க்கும் அக்மார்க் தந்தையாகவும் சிறப்பு செய்திருந்தார் விஜய். 

ஷாருக்கானிடம் உங்களுக்கு பிடித்த அட்லீயின் படங்கள் என்னவென்று கேட்டபோது, அவர் தெறி மற்றும் மெர்சல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

மெர்சல்: விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்தியா மேனன் என முன்னணி நட்சத்திரங்களுடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறி தரமான வெற்றியை பதிவு செய்திருந்தார் இந்த தமிழன். சிறந்த நடிகருக்கான சர்வதேச ஐரா விருதை இப்படத்தின் மூலம் விஜய் அண்ணனுக்கு வாங்கி தந்தார் இந்த பாசமலர்.

பிகில்: பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து விஜய் இரு வேடங்களில் தெறிக்க விட்ட படம் தான் பிகில். பெண்களின் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து வீராங்கனைகளை போராடும் சிங்கப்பெண்மணிகளாக மாற்றினார் தளபதி. 

இப்படத்திற்கு பின் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் இணைந்து மாபெரும் வெற்றியை பதிவு செய்ததோடு தமிழனின் பெருமையை உலகறிய செய்தார் அட்லீ. 

Trending News