இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கிறது. அதுவும் விஜய் இப்போது 200 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வருகிறார். அதேபோல் அஜித்தும் விஜய்க்கு நிகராக சம்பளம் கேட்டுள்ளார். அதாவது 200 கோடி கேட்ட நிலையில் இப்போது 160 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
அதுவும் தற்போது விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு அஜித் அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நிலையில் அவரது படத்தை தயாரிக்க நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரவில்லை. இவ்வளவு சம்பளம் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது என ஓடிவிட்டார்களாம்.
சத்யஜோதி பிலிம்ஸ் : 1980 களிலிருந்து படங்களை தயாரித்து வரும் நிறுவனம் தான் சத்யஜோதி பிலிம்ஸ். இந்நிறுவனத்துடன் அஜித் முதல் முறையாக விவேகம் படத்தில் கூட்டணி போட்டிருந்தார். இதற்கு அடுத்தபடியாக விசுவாசம் படமும் இதே கூட்டணியில் அமைந்த நிலையில் வசூலை வாரி குவித்திருந்தது. ஆனால் அதன் பிறகு அஜித்துடன் இந்நிறுவனம் கூட்டணி போடவில்லை.
Also Read : விஜய்யின் கடைசி இரண்டு படங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சம்பளம்.. விடாக்கண்டன் போல் அஜித் முழிக்கும் முழி
ஏஎம் ரத்னம் : இந்தியன் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த நிறுவனம் தான் ஏஎம் ரத்னம். இந்நிறுவனம் 2013ஆம் ஆண்டு அஜித்தின் ஆரம்பம் படத்தை தயாரித்திருந்தது. இதைத்தொடர்ந்து என்னை அறிந்தால், வேதாளம் என அடுத்தடுத்து அஜித் படங்களாக இருந்தது. ஆனால் வேதாளம் படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த நிலையில் அதன் பிறகு அஜித் படத்தை தயாரிக்கவில்லை.
விஜயா வௌஹினி ஸ்டுடியோஸ் : பழமையான தயாரிப்பு நிறுவனம் தான் விஜயா வௌஹினி ஸ்டுடியோஸ். இப்படம் சிவாஜி, எம்ஜிஆருக்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் அஜித்தின் வீரம் படத்தை தயாரித்த நிலையில் அதன் பிறகு இவர்களுடன் கூட்டணி போடவில்லை.
போனி கபூர் : பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனர் தான் போனி கபூர். இவர் ஜி ஸ்டுடியோஸ் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன்பிறகு அஜித் சம்பளத்தை உயர்த்தியதால் இந்த நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவில்லை.
Also Read : விஜய் மிஸ் பண்ணி பிரம்மாண்ட வெற்றி கிடைத்த 5 படங்கள்.. அஜித்துக்கு அந்தஸ்தை வாங்கி கொடுத்த தளபதி