புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தளபதி 69-க்கு கொக்கு போல் காத்திருக்கும் 4 தயாரிப்பாளர்கள்.. ரிசல்ட்டுக்கு முன்பே துண்டு போட்டு இடம் பிடிக்கும் AGS

Thalapathy 69: ‘ தளபதி’ என்ற வார்த்தையை இப்போது தமிழ் சினிமாவின் ஒரு மேஜிக் ஆக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 30 வருடங்களாக தன்னுடைய மேஜிக்கை தியேட்டர்ஸ் ஸ்கிரீனில் நடத்தி வருகிறார் நடிகர் விஜய். சம்பளம் 200 கோடியை தாண்டிய பிறகும் தைரியமாக சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொன்னால், இவரை எப்படி கொண்டாடாமல் இருப்பார்கள்.

புதுசாக ரிலீஸ் ஆகும் படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு கிடைக்குமோ, அதை விட டபுள் மடங்கு 20 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன ஒரு படத்துக்கு கிடைக்கும் என்றால் அது விஜய்க்கு தான் சாத்தியம்.

மக்களுக்காக சேவை செய்யப் போகிறேன், இதனால் சினிமாவை விட்டு விலகுகிறேன் என திட்டவட்டமாக விஜய் சொல்லிவிட்டார். இதனாலேயோ என்னவோ அவருக்கு அடுத்த ரிலீஸ் ஆக காத்திருக்கும் GOAT படத்தை விட அவருடைய கடைசி படமான தளபதி 69 க்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

தளபதியின் முதல் படத்தை யார் இயக்கினார்கள், தயாரித்தார்கள் என்பதை வேண்டுமானால் கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய தேதியில் அவருடைய கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனராக இருக்கட்டும், தயாரிப்பாளராக இருக்கட்டும் ஒரு வரலாறு தான்.

தளபதியின் கடைசி படம் என்பதால் கண்டிப்பாக இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இதனால் தளபதி 69 படத்தை தயாரித்தே ஆக வேண்டும் என நான்கு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு காத்திருக்கிறார்கள்.

விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படத்தை லலித்குமார் தயாரித்து இருந்தார். தளபதி 69 படத்தை தயாரித்து விஜய் உடனான தன்னுடைய பயணத்தை ஹாட்ரிக் ஆக மாற்றிவிட பெரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். லியோ மற்றும் மாஸ்டர் படத்தின் மூலம் நல்ல காசு பார்த்த கை, ஆசையாக தானே இருக்கும்.

நடிகர் விஜய் உடன் பல ஆண்டுகளாக பயணித்து வருபவர் தான் அவருடைய மேனேஜர் ஜெகதீஷ். இவர் மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ‘The Route’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக தன்னுடன் பயணித்து வந்த ஜெகதீசுக்கு விஜய் கடைசி படம் பண்ணிக் கொடுக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தை AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. முதன் முதலில் இவர்கள் பெரிய பட்ஜெட் படம் என இந்த படத்தை தான் தயாரிக்கிறார்கள். இதுவரைக்கும் AGS பெத்த லாபம் பார்த்த படம் என்றால் அது லவ் டுடே தான். GOAT படம் ரிலீஸ் ஆகி ரிசல்ட் என்ன என்பதை பார்ப்பதற்கு முன்னரே தளபதி 69 படத்தை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களை எல்லாம் தன் கைவசம் வைத்திருக்கிறது சன் பிக்சர்ஸ். கடைசியாக நடிகர் விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் பணியாற்றி இருந்தார்கள். சமீபத்தில் ஜெயிலர் படத்துக்காக ரஜினியுடன் கைகோர்த்தபோது, கொஞ்சம் தளபதியை டேமேஜும் செய்தார் கலாநிதி மாறன்.

அட காசு பணம் வந்ததுக்கப்புறம் வெட்டி ரோஷம் எதுக்குன்னு சன் பிக்சர்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கிறது. விஜய் நடிக்கும் கடைசி படம், வசூலை வாரி விடலாம் எனவே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடவே கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

Trending News