வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இளம் வயதிலேயே துணையை இழந்த நாலு பிரபலங்கள்.. உதயநிதிப்பட டைரக்டருக்கு ஏற்பட்ட சோகம்

4 Tamil celebrities who lost their partner at a young age: “உள்ளே அழுகிறேன்! வெளியே சிரிக்கிறேன்! ரெட்டை வேடம் தான் வெளுத்து வாங்குறேன்” என்ற வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ கலைஞர்களுக்கு முற்றிலும் பொருந்துவது உண்மையே.  நிஜ வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அதை மறைத்து மக்களை சந்தோஷப்படுத்துவது கலைஞர்கள் மட்டுமே. பிரபலங்கள் சிலர் இளவயதில் தனது துணையை இழந்த போதும் கலை துறையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர்,

பரத் கல்யாண்: சின்னத்திரையில் பழம்பெரும் நடிகராக விளங்குபவர் பரத் கல்யாண். இவரின் மனைவி  கற்கால உணவு முறையை ஊக்குவிக்கும் பேலியோ டயட் எனும் டயட்டை ஃபாலோ பண்ணி வந்ததால் டயாபடிக் அதிகமாகி உயிரை காவு வாங்கியது.  இந்த பேலியோ டயட் முறையில் பால், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து முதலியவை நீக்கிய காய்கறி உலர் பழங்கள் போன்றவற்றை மட்டும் உட்கொண்டதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென இறந்தது சின்ன திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also read: இப்படி ஒரு அழகான, இளமையான மினிஸ்டர் பார்த்தது இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.. உதயநிதி ரியாக்சன்?

அருண் ராஜா காமராஜா: உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா. இவர் ஏற்கனவே அட்லியின் ராஜா ராணி, மான் கராத்தே போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை பாடியிருந்தார் அருண்ராஜா காமராஜவும் இவரது அன்பு மனைவி சிந்துஜாவும் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த நிலையில், கொரோனா தொற்றின் மூலம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது இரண்டு பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் அருண் ராஜா காமராஜா. கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக தகவல். ஆனால் இயக்குனர் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

ஸ்ருதி சண்முகப்பிரியா: சன் டிவியில் நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முக பிரியா. 2022  மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை  பெற்ற அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். கணவருடன் அடிக்கடி ரீல்ஸ்கள் பதிவிட்டு ட்ரெண்டிங்காக இருந்து வந்தார் ஸ்ருதி. ஜிம் மாஸ்டர் ஆன இவரது கணவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானது வருத்தத்திற்குரியது.

ஆனந்த கண்ணன்: சன் மியூசிக்இன் பிரபலமான ஸ்டைலிஷ் நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கிய ஆனந்த கண்ணன் அரிதான புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது மீடியா உலகில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.  இவரது மனைவி ராணி கண்ணா சிங்கப்பூரில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார்.

Also read: ஹீரோயின் ஆக ஜொலித்த தமன்னாவின் சூப்பர் ஹிட் 5 படங்கள்.. இப்போ ஐட்டம் டான்ஸ் மட்டும் ஓகே சொல்லும் மில்க் பியூட்டி

Trending News