திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரம்மி சரத்குமாரிடம் காதல் லீலையில் சிக்கிய 4 நடிகைகள்.. சினிமாவுக்கு கும்மிடு போட்டு ஓடிய ஹீரோயின்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சமீப காலமாக ரம்மி விளம்பரம், சூப்பர் ஸ்டார் சர்ச்சை என சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப காலங்களில் தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னேறியவர்தான் இவர். அதே நேரத்தில் இவரது காதல் விளையாட்டுக்களும் அவ்வப்போது சர்ச்சை ஆகின. இவரால் தமிழ் சினிமாவுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஓடிய நடிகையும் உண்டு. தற்போது ராதிகாவை திருமணம் செய்த பிறகு இந்த காதல் சர்ச்சைகளில் சிக்காமல் தப்பித்து வருகிறார்.

ஹீரா: நடிகை ஹீரா 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். கமல், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் இவர். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் படம் பண்ணும் போது சரத்குமாருக்கு இவர் மீது காதல் ஏற்பட்டது. ஆனால் ஹீரா அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. காதல் கோட்டை சமயத்தில் நடிகர் அஜித் கூட இவருக்கு காதல் கடிதம் எழுதுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read: சுப்ரீம் பெருசா, சூப்பர் ஸ்டார் பெருசா.. கேள்வி கேட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட சரத்குமார்

நக்மா: நடிகை நக்மா 90களில் கோலிவுட் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பிரபுதேவா, கார்த்திக், ரஜினிகாந்த் போன்ற டாப் ஸ்டார் களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சரத்குமார் உடன் நடிக்கும்போது நக்மாவுக்கு அவரால் பலவிதத்திலும் காதல் தொல்லைகள் ஏற்பட்டு இருக்கிறது. நக்மா தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்க இந்த தொல்லை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மீனா: நடிகை மீனா அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடியாக நடித்தவர். மீனாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அந்த நேரத்தில் அதிகம் உண்டு. மீனா மீது காதல் வயப்படாத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். இதில் சரத்குமார் ஒரு படி முன்னே போய் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் வயது வித்தியாசம் காரணமாக மீனாவின் அம்மா தர மறுத்து விட்டார்.

Also Read: சரத்குமார் முதல் மனைவி விவாகரத்து, ராதிகா காரணம் இல்ல.. இந்த நடிகை தானாம்

சுகன்யா: தன்னுடைய சிறந்த நடிப்பினாலும், வசீகரமான அழகினாலும் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் கமலஹாசன், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சரத்குமாருக்கு நடிகை சுகன்யா மீதும் காதல் ஏற்பட்டு இருக்கிறது.

இப்படியாக நடிகர் சரத்குமார் 90ஸ் காலங்களில் பண்ணாத காதல் சேட்டைகளே இல்லை என்று சொல்லலாம். இவர் சாயாதேவி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பூஜா , வரலட்சுமி என்ற இரண்டு பெண்கள் உண்டு. இதில் வரலட்சுமி இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். சாயாதேவியுடன் விவாகரத்து ஆன பிறகு இவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read: பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட சரத்குமார்.. பணம் பாதாளம் வரை பாயுது

Trending News