வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

4 படங்களில் ரஜினியுடன் கவுண்டமணி செய்த அலப்பறைகள்.. எஜமானுடன் தூக்கு சட்டிக்கு அலைந்த வெள்ளயங்கிரி

4 Rajini and Goundamani combination comedy flims:1977 ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே படத்தில் ரஜினி வில்லனாகவும் கவுண்டமணி சிறு வேடத்திலும் இணைந்து நடித்திருந்தனர். இருவரும் தனித்தனியாக சினிமாவில் கொடிகட்டிய பின் மீண்டும் கூட்டணி வைத்து காமெடியில் கலக்கி இருந்த படங்கள் இதோ

மன்னன்: 1992 இல் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ரஜினி,விஜயசாந்தி,குஷ்பூ விசு, கவுண்டமணி, மனோரமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கவுண்டமணி மற்றும் ரஜினியின் காம்போ காமெடியில் ரசிகர்களை வயிறு வலிக்கச் செய்தது. இப்படத்தில் வந்த “துணிச்சலா வேலைக்கு கிளம்பிட்டு வந்துருவீங்களே”,”வேலை செய்ற அளவுக்கு படிச்சிருக்கேன்”,”நாட்டில் இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க மாட்டேங்குது. புண்ணாக்கு விக்கிறவன் குண்டு ஊசி விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் என்று வருகிறான்”  என்ற கவுண்டமணியின் வாசகங்கள் இன்றும் மீம்ஸில் வலம் வரும் எவர்கிரீன் நகைச்சுவையாக உள்ளது.

எஜமான்:ரஜினி கவுண்டமணி கூட்டணியில் 1993 இல்வெளிவந்த மற்றொரு படம் எஜமான் இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் கதையின் வேகத்திற்கும் ஈடு கொடுக்கும் படியாகவும் சுவாரஸ்யத்தை கூட்டும் படியாகவும் அமைந்திருக்கும் ரஜினி மற்றும் கவுண்டமணி இணைந்து கலக்கிய “தூக்குச் சட்டியை தூக்கிப் பார்த்து மோப்பம் பிடிடா” என்ற பாடல் கிராமத்தில் வேலை செய்பவர்கள்அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்திருந்தது.

Also Read:கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு.. ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம்

உழைப்பாளி: பி வாசு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் மீண்டும் இவர்கள் கூட்டணி படத்திற்கு பலமாக அமைந்தது. ரஜினியை தேடும் வக்கீலின் பி ஏ வாக வரும் கவுண்டமணி, காமெடியாலும்  உடல் மொழியாலும் ரசிகர்களை கட்டி போட்டு இருப்பார். இவர்கள் தவிர படத்தில் விவேக்,சார்லி,மயில்சாமி என பலரும் நடித்திருந்தனர்.

பாபா: நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி மற்றும் கவுண்டமணி பாபாவில் இணைந்தனர். ரஜினியின் பக்க பலமான நண்பராக கவுண்டமணி நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ல் வெளிவந்த படத்தில் கவுண்டமணி பல கவுண்டர்களை அள்ளிவிட்டு இருப்பார். காலங்கள் கடந்த பின்னும் இவர்கள் கூட்டணியில் கலக்கிய நகைச்சுவை காட்சிகள் பலவும் தற்போது ரீல்ஸ்கள் ஆகவும் மிம்ஸ்களிலும் வந்து அனைவரும் ரசிக்கும் படியாக இருந்து வருகிறது.

Also Read:கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. தேடி வரும்படி வைத்த நக்கல் மன்னன்

Trending News