பாடல்கள் ரிலீஸ் ஆகி பயங்கர பேமஸான பிறகு, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதென்ன என்பதை போல் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் தற்போது வரை சில படங்கள் ரிலீஸ் ஆகாமலே இருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகாமல், கைவிடப்பட்டு இருந்த 4 படம் என்ன என்பதை பார்க்கலாம்.
முன்னணி நடிகர்கள் நடித்து ரசிகர்களிடையே ஹைப் அதிகமாகி, தற்போது வரை எந்த அப்டேட் இல்லாமல் சில படங்கள் இருக்கின்றன. அந்த படங்கள் மட்டும் ரிலீஸ் ஆகி இருந்தால் தமிழ் சினிமாவிற்கே பெருமையும் அங்கீகாரத்தையும் தேடி தந்திருக்கும். ரிலீசுக்கு முன்பு பாடல் வெளியானதால் பயங்கர எதிர்பார்ப்பை தூண்டியது. படம் வெளியாகி இருந்தால் அதில் இசையமைப்பாளர்களுக்கும் வேற லெவல் மார்க்கெட்டும் அதிகமாகி இருக்கும். அவர்களின் போதாத காலமும் என்னவோ ரிலீஸ் ஆகாததால் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காமல் போனது.
மதகத ராஜா: மசாலா திரைப்படமாக சுந்தர் சி இயக்கத்தில் விஷால் கூட்டணியில் உருவானது மதகஜராஜா. இதில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் நித்தின் சத்தியா ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் விஷால் பாடிய டியர் லவ்வர் என்னும் பாடல் பயங்கர வைரலாக இருந்தது.
யோகன் அத்தியாயம் ஒன்று: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2013 இல் வெளிவர இருந்த யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் இடம்பெறும். இதில் விஜய் நடித்த இந்த படத்துக்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார் பல்வேறு காரணங்களால் படம் கை விடப்பட்டது தற்பொழுது கூட ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாக கௌதம் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு கைவிட்டுப் போனதை நினைத்து, விஜய் தற்போது வரை வருத்தப்படுகிறார்.
Also Read:இந்தியளவில்1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஆறு படங்கள்.. ஜெய்லர் முடியாததால் லியோவுக்கு நெருக்கடி
கெட்டவன்: நடிகர் சிம்புவே இயக்கிய ஆக்சன் திரைப்படம் கெட்டவன். இதில் சிம்பு, நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஆல்பம் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்து, வேற லெவல் ஹிட் ஆகியிருந்தாலும் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமலே போனது.
மருதநாயகம்: உலக நாயகன் கமல்ஹாசன் 1999ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் மருதநாயகம். இதில் விஷ்ணுவரன், நாசர், சத்யராஜ், பசுபதி போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்பட தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். நிதி நெருக்கடி காரணமாக திரைப்படம் கைவிடப்பட்டது. ஒரு தயாரிப்பாளராவது முன் வந்தால் மீண்டும் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார் கமல். திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது மட்டும் ரிலீஸ் ஆகி இருந்தால் பான் இந்தியா லெவல் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
Also Read:திருமணம் ஆகாமலேயே நக்மா குடும்பம் நடத்திய 4 பிரபலங்கள்.. லிவிங் டுகெதர் போதும் என மாறிய ஒண்டிக்கட்டை