வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வாடிவாசலை நம்பி பிரயோஜனம் இல்ல.. கலைப்புலி தாணு துண்டு போட்ட 4 படங்கள்

4 Upcomimg films Produced by Producer Kalaipuli Thanu: இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து எடுக்க போகிற வாடிவாசல் படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்த படத்தை எப்போதுதான் துவங்குவார்கள் என்று பார்த்து பார்த்து தாணுவின் கண் பூத்தே போய்விட்டது. இனியும் காத்திருந்தா வேலைக்காகாது என்று தாணு இப்போது நான்கு படங்களை தயாரிப்பதற்காக கமிட் ஆகிவிட்டார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான புதுக்கோட்டை படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தாலும், விமர்சகர்கள் மத்தியில் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று என்கின்ற அடையாளத்தை பெற்றது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இந்த வருடம் துவங்க செல்வராகவன் முடிவெடுத்து இருக்கிறார்.

இந்தப் படத்தை கலைப்புலி தாணு தான் தயாரிக்கிறார். அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் வாரிசான சௌந்தர்யா ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக புதிய படத்தை இயக்க உள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.

Also Read: குருவிற்கு கூட நன்றி கடன் செலுத்த முதுகு எலும்பு இல்லாத கமல்.. இந்த விஷயத்தில் ரஜினி எவ்வளவோ பரவாயில்ல!

கலைப்புலி தாணு தயாரிக்கும் 4 படங்கள்

மேலும் சீமான் இயக்கத்தில் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கோபம்’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்திற்கும் தாணு தான் ப்ரொடியூசர். அதோடு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திரில்லர் நிறைந்த கதைக்களத்தை கொண்ட ட்ரெயின் திரைப்படம், மிஷ்கின் இயக்கத்தில் கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.

இவ்வாறு அடுத்தடுத்து நான்கு படங்களை தயாரிக்க கமிட்டான தாணு, வாடிவாசல் படத்தை எப்ப துவங்க போகிறார்களோ அப்போ துவங்கட்டும் என்று, இதைப்பற்றி இப்போது கண்டும் காணாததுமாய் இருக்கிறார். அதே சமயம் வெற்றிமாறனும் விடுதலை 2 படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசலை துவங்க பார்க்கிறார்.

Also Read: 22 வருடங்களுக்குப் பிறகு மிரட்ட வரும் கமல்.. சண்டையை மறந்து கல்லா கட்ட தயாரான முதலாளி

Trending News