Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அஜித் பர்த்டேக்கு காத்திருக்கும் தரமான 4 அப்டேட்.. இத்தனை படங்கள் ரீ ரிலீஸா?

அஜித் பர்த்டேக்கு காத்திருக்கும் தரமான 4 அப்டேட்.. இத்தனை படங்கள் ரீ ரிலீஸா?

Ajith : அஜித்தின் பிறந்த நாள் மே ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் படங்களின் புதுவரவு எதுவுமே இல்லை.  துணிவு படத்திற்கு […]

Ajith : அஜித்தின் பிறந்த நாள் மே ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் படங்களின் புதுவரவு எதுவுமே இல்லை. 

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகாததால் அவரது ரசிகர்கள் சிறு அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும் 2024 ஆம் ஆண்டு அஜித்துக்கு பொன்னான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனென்றால் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. 

ரீ ரிலீஸாகும் அஜித்தின் மூன்று படங்கள்

இந்நிலையில் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். முதலாவதாக விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. 

அதேபோல் குட் அக்லி படத்தைப் பற்றிய முக்கிய அப்டேட்டை அஜித்தின் ரசிகராக ஆதிக் கொடுக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து அஜித்தின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான பில்லா படம் ரிலீஸ் ஆகிறது. 

மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த தீனா படமும் ரிலீசாகிறது. மங்காத்தா படத்தின் ரைட்ஸை சனபிக்சர்ஸ் வாங்கி உள்ள நிலையில் அந்த படமும் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. 

இப்போது புதுவராக வெளியாகும் படங்களை காட்டிலும் ரீ ரிலீஸ் படங்கள் நல்ல வசூலை பெற்று வருகிறது. சமீபத்தில் கில்லி படம் கூட எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்வதால் தயாரிப்பாளர்கள் ரீ ரிலீஸ் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.