90-களில் தனது சினிமா பயணத்தை துவங்கிய தளபதி விஜய் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதன் பிறகு தற்போது பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் படங்கள் எல்லாம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாகவும், ட்ரெண்ட் செட்டிங் படமாகவும் இருப்பதால் அவர்களால் மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத படமாக இருக்கிறது.
இவருடைய படங்களுக்கெல்லாம் முதலில் இளைஞர்களின் கூட்டம் தான் திரையரங்குகளில் அலைமோதும். ஆனால் விஜய் நடிப்பில் வெளியான ஒரு படத்திற்கு பிரபல செய்தி நிறுவனம், ‘காதலுக்கு இன்னொரு தேசிய கீதம்’ என்று விமர்சித்ததை தொடர்ந்து அந்தப் படத்திற்கு பெண்களின் கூட்டம் தியேட்டருக்கு படையெடுக்க துவங்கியது.
Also Read: விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி.. லியோவுக்கு போட்டியாக இறங்கும் பிரம்மாண்ட படம்
1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் தான் விஜய் நடிப்பில் வெளியான முதல் வெற்றி படம். இந்த படம் தான் அவருடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனை முனையாக அமைந்தது மட்டுமல்லாமல் அவரை ஒரு நட்சத்திரமாகவே அங்கீகரித்தது.
இந்த படத்தில் விஜய் தன்னுடைய காதலியுடன் சேர நினைக்காமல், காதலி விரும்பியவருடன் அவர் சேரட்டும் என்ற எண்ணத்துடன் நடித்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதிலும் இந்த படத்தில் ‘மதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் காதல் என்பது காக்கா குருவிகளிடம் கூட இருக்கிறது’ என்ற டயலாக்கை உணர்ச்சி பூர்வமாக பேசி இளசுகளின் மனதை கவர்ந்தார்.
Also Read: மாஸ் ஹீரோவை நட்பு வட்டாரத்தில் இருந்து விரட்டிய விஜய்.. பிடிக்காத கூட்டணியால் வந்த வினை
அப்படிப்பட்ட படத்திற்கு 4 வாரங்களாக பெண்கள் திரையரங்கில் தலை காட்டவில்லை. அதன்பின் பிரபல செய்தி நிறுவனம், ‘விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம் காதலுக்காக கொடுக்கப்பட்ட இன்னொரு தேசிய கீதம்’ என்று விமர்சித்ததை தொடர்ந்து அந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் திரையரங்கில் குவியத் துவங்கினர்.
இதனால் இந்த படம் 200 நாட்கள் மட்டுமல்ல அதற்கு மேலாக 365 நாட்கள் வரை ஓடி, சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இந்த விஷயத்தை படத்தின் இயக்குனர் விக்ரமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதை தற்போது தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.
Also Read: அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்