ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

சுதந்திரத்திற்கு முன் சுதந்திரமாக படத்தை இயக்கிய 4 பெண்கள்.. குழந்தை உள்ளம் படத்தை எடுத்த சாவித்திரி

சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை படங்களை இயக்குவதில் மிகவும் ஆர்வமாக இருப்பது ஆண் இயக்குனர்கள் தான். தற்போது இந்த காலத்தில் எப்பயாவது அத்திப்பூத்தாற்போல் சில பெண் இயக்குனர்கள் படத்தை இயக்குகிறார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே சில பெண் இயக்குனர்கள் தைரியமாக படத்தை இயக்கியிருக்கிறார்கள். அந்த பெண் இயக்குனர்களை பற்றி நாம் பார்க்கலாம்.

டிபி ராஜலட்சுமி: டி.பி.ராஜலட்சுமி இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு மிஸ் கமலா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு, எடிட்டிங்,  இசை மற்றும் நடிப்பது போன்ற அனைத்தையும் செய்து வெற்றிகரமாக எடுத்த ஒரே இயக்குனர் டி பி ராஜலக்ஷ்மி மட்டும்தான். அதுவும் இந்த படம் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனராகவும் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குனர் ஆகவும் அதிக அளவில் பெயர் பெற்றது.

Also read: சுதா கொங்கராவுக்கு முன்பே சாதனை படைத்த பெண்மணி.. முதல் பெண் ஹீரோயின், இயக்குனரான சிங்கப்பெண்

பி பானுமதி: பானுமதி இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு சந்திராணி என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் பானுமதி, என் டி ராமராவ், எஸ் வி ரங்காராவ் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இருந்திருக்கிறது. இப்படத்தின் சண்டியின் வாள் சண்டையும், புலியுடன் சண்டைக் காட்சிகளும் உடன்பிறப்புகளின் பரிமாற்றமும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்தது.

நடிகை சாவித்திரி: சாவித்ரி இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு குழந்தை உள்ளம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை தயாரித்தது மற்றும் எழுதியது நடிகை சாவித்ரி. இதில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் ஜெமினி கணேசன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு மற்றும் அவருடைய அம்மாவின் பேச்சுக்காக நகரத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அதன் பின்வரும் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: இமேஜே போனாலும் துணிந்து நடித்த 5 நடிகர்கள்.. ஷில்பாவாக சொக்க வைத்த விஜய் சேதுபதி

விஜய நிர்மலா: விஜய நிர்மலா இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு ராம் ராபர்ட் ரஹீம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கிருஷ்ணா, ரஜினி, சந்திர மோகன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்ற மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது.

இப்படி 1980க்கு முன்பே பெண் இயக்குனர்கள் நான்கு திரைப்படங்களை அந்த காலத்திலேயே இயக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்தில் பெண் இயக்குனர்கள் படம் எடுப்பதை பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. ஆனால் இந்த நான்கு இயக்குனர்கள் அந்த காலத்திலேயே படத்தை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். தற்போது இருக்கிற பெண் இயக்குனர்களுக்கு இவர்கள் தான் முன்னோடியாக விளங்குகிறார்கள்.

Also read: சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் 5 நடிகைகள்.. கொடுத்த கேரக்டராகவே வாழும் அஞ்சலி

- Advertisement -spot_img

Trending News