திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

என்ன கண்மணி இதெல்லாம்.. 45 வயதில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி தரிசனம், வைரல் போஸ்டர்

Manju Warrier’s Viral Poster: மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன், துணிவு என நடித்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தில் நடித்து வரும் இவர் மலையாளத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் அவர் நடித்துள்ள ஃபுட்டேஜ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் என்ன கண்மணி இதெல்லாம்? மஞ்சு சேச்சியா இது? நம்பவே முடியலையே என ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தி வருகின்றனர்.

அந்த அளவுக்கு அந்த போட்டோ தற்போது சர்ச்சையாக பேசப்படும் அளவுக்கு இருக்கிறது. அதில் மஞ்சு வாரியர் ஹீரோவின் மடியில் அமர்ந்து அவரை கட்டிப்பிடித்தது போல் இருக்கிறார். பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Also read: கண்ணு கூசுதே, அனிமல் ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுக்கும் அனுபமா.. ஐட்டம் ரேஞ்சுக்கு அடிக்கும் லிப்லாக்

தற்போது 45 வயது ஆகும் மஞ்சு வாரியர் பல தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் இதுவும் ஒன்று என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள மஞ்சு ஒவ்வொரு கதவுக்கும் பின்னால் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

45 வயதில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி தரிசனம்

footage-poster
footage-poster

இந்த போஸ்டர் பலரையும் மிரள செய்தாலும் ஃபுட்டேஜ் படத்தில் காயத்ரி அசோக் என்ற மற்றொரு ஹீரோயினும் இருக்கிறார். அதனால் இது மஞ்சு சேச்சி கிடையாது. காயத்ரி அசோக் தான் எனவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

Also read: 15 வருட சினிமா வாழ்க்கை.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Trending News