வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சன் டிவி நடிகையை கரம் பிடித்த 46 வயது ரெடிங் கிங்ஸ்லி.. தீயாய் பரவும் கல்யாண போட்டோ

Actor Redin Kingsley Marriage Photos: இந்த வருடம் நாம் எதிர்பார்க்காத பல கல்யாண செய்திகள் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தியது. அந்த வகையில் வருடத்தின் இறுதியில் செம சர்ப்ரைஸ் ஆன ஒரு கல்யாண நிகழ்வு நடந்திருக்கிறது. டாக்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ரெடிங் கிங்ஸ்லி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

46 வயதாகும் இவர் சிங்கிளாக இருந்ததே நமக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் துர்கா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சங்கீதாவை தான் இவர் திருமணம் செய்திருக்கிறார்.

Also read: ரஜினியின் தில்லு முல்லு மாதவிய ஞாபகம் இருக்கா.? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

திருமண பந்தத்தில் இணைந்த ரெடிங் கிங்ஸ்லி

இவர்களின் திருமண செய்தியை டான்ஸரும் நடிகருமான சதீஷ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் இந்த ஜோடிக்கு அவர் வாழ்த்துக்களை கூறியதோடு இது சினிமா சூட்டிங் கிடையாது நிஜ கல்யாணம் என்று விளக்கமும் கொடுத்துள்ளார்.

சன் டிவி நடிகையை கரம் பிடித்த ரெடிங் கிங்ஸ்லி

redin kingsley
redin kingsley

ஏனென்றால் இந்த திருமண செய்தியை யாராலும் நம்ப முடியவில்லை. அந்த வகையில் ரெடிங் கிங்ஸ்லி தன் மனைவியோடு இருக்கும் போட்டோ இப்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைக்க டாப் 7 காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. வடிவேலு முதல் யோகி பாபு வரை

பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை ஜோருடன் இருக்கும் அவருக்கு இணையாக கல்யாண பெண்ணும் தேவதையாக ஜொலிக்கிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இப்போது தங்களுடைய கல்யாண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில நெட்டிசன்கள் நம்பவே முடியலையே என்ற ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ரெடிங் கிங்ஸ்லி-சங்கீதா

renin-kingsley
renin-kingsley

Trending News