சன் டிவி ஆபீஸ்க்கு போன ரஜினி.. 40 வருட நட்பு கூப்பிட்டதும் மறுக்காமல் தலைவர் செய்த காரியம்

ரஜினி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு இருவருக்கும் 40 வருடம் நட்பு இருந்து வருகிறது.73 வயதாகும் மோகன் பாபு இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இவரும் ரஜினியும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் மோகன் பாபு ஒய் எம் சி ஏ கல்லூரியில் பி டி வாத்தியாராக பணிபுரிந்தார்.

1974ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கியவர் இப்பொழுதும் நடித்து வருகிறார். அண்ணன் ஒரு கோயில், அன்னை ஓர் ஆலயம் போன்ற தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்பொழுது இவரது வாரிசான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சிவபக்தர் கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் மோகன் பாபுவும் நடித்துள்ளார்.

மகன் அறிமுகமாகும் கண்ணப்பா படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மோகன் பாபுவை சந்தித்துள்ளனர். ஆந்திராவில் திருப்பதியில் அமைந்துள்ள மோகன் பாபுவின் யுனிவர்சிட்டிக்கு ரஜினி அவர் மகளுடன் சென்று பார்வையிட்டு வந்தார்.

தற்போது மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடித்திருக்கும் படத்தை சன் டிவி ஆபீஸில் பார்த்துள்ளார் ரஜினிகாந்த். கலாநிதி மாறன் மட்டும் அனுமதிக்கப்படும் அந்த திரையரங்கிற்கு ரஜினி மற்றும் மோகன் பாபுவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 வருட நட்புடன் இணைந்து படத்தை பார்த்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →