திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே

Actress Tamannaa Movies: அஜித், விஜய் என மாஸ் ஹீரோகளுடன் நடித்த தமன்னா, சில ஹிந்தி படங்களிலும் நடித்த வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்த தமன்னா சில காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குள்ளாகியது. பின்னர் விஜய் வர்மாவுடன் காதல், தொடர்ந்து அதே வெப் சீரிஸில் இரண்டாம் பாகம் போன்று அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார் தமன்னா. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கும் தமன்னா ஆடி பாடும் நா காவலா பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இவ்வாறு பேசப்பட்ட தமன்னா இந்த பூனையும் பால் குடிக்குமா என்று அவர் ஆரம்ப காலத்தில் நடித்த 5 படங்கள் பற்றிய பதிவு.

கல்லூரி : இயக்குனர் சங்கரின் S பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் கல்லூரி. இதில் அகில், தமன்னா ஆகியோர் நடித்திருப்பார்கள். 2000 ஆம் ஆண்டு நடந்த தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது இந்த படம். கிராமத்து நண்பர்களின் இடையில் அழகான தோற்றத்துடன் பெங்களூரில் இருந்து கல்லூரியில் படிக்க வரும் பெண்ணாக தமன்னா நடித்திருப்பார். கல்லூரி காதல் கதையாக இருந்த போதிலும் நண்பர்களிடையே அமைதியான பெண்ணாக வலம் வருவார் தமன்னா. இப்படத்தில் தமன்னாவின் நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

Also Read : சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் வராத பிரபலம்.. கமலின் அனுமதிக்காக காத்திருந்த ரஜினி

ஆனந்த தாண்டவம் : இயக்குனர் ஏ. ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த படம் ஆனந்த தாண்டவம். சித்தார்த் வேணுகோபால், தமன்னா, ருக்மணி, கிட்டி நடித்திருந்தனர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை தழுவிய கதை, ஆனால் படத்தில் எதிர்பார்த்த அளவு சுவாரஸ்யம் இல்லை. இந்தப் படத்தில் முற்பகுதியில் துள்ளித் திரியும் பெண்ணாக வரும் தமன்னா கதையின் பிற்பகுதியில் சீரியஸாகி நம்மையும் சீரியஸாக்கி இருப்பார்.

கண்டேன் காதலை : இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் பரத், தமன்னா, சந்தானம் நடித்த படம் கண்டேன் காதலை. ஹிந்தி படத்தின் ரீமேக் ஆன இப்படத்தில் தமன்னா துரு துருப் பெண்ணாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வாழ்க்கையில் விரக்தியான ஹீரோ தொன தொன வெப்ப பேசும் பெண்ணான ஹீரோயின் தமன்னாவை பார்த்து வியப்பாகி காதலில் விழுகிறார். படம் முழுக்க பேசிக்கொண்டே நடித்து அந்த சமயத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தமன்னா.

Also Read : தமன்னாவுக்கு மரண பயத்தை காட்டிய ஹீரோயின்.. ஐட்டம் நடிகையாக மாறியதன் பின்னணி

வீரம் : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் நடித்த படம் வீரம். நாசர், தமன்னா இருவருக்கும் சண்டை என்றாலே ஆகாது. அஹிம்சைவாதியான நாசர் மற்றும் தமன்னா குடும்பத்தில் அதிரடி காரரான அஜித் நுழைந்து நாசரை கொல்ல முயற்சிப்பவர்களை களையடுப்பார தமன்னா குடும்பத்திற்கு தெரியாமலேயே. இந்த படத்தில் அமைதியான குடும்பத்தில் மிக அடக்கமான பெண்ணாக நடித்திருப்பார் தமன்னா.

பையா : திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த படம் பையா. அப்பா ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல், அம்மாவையும் இழந்த தமன்னா செய்வது அறியாது அப்பாவின் நண்பரின் உதவியுடன் மும்பைக்கு புறப்படுவார். அம்மாவை இழந்த சோகம் மற்றும் திருமணம் செய்ய துரத்தும் வில்லனைப் பார்த்து பயப்படும் அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார் தமன்னா. கால் டாக்ஸி டிரைவர் என்று தமன்னாவை காப்பாற்றும் கார்த்தி உடன் காதல் போன்ற எல்லா காட்சிகளிலும் தமன்னா அழகாக நடித்திருப்பார் இந்த படத்தில்.

Also Read : அந்தரங்க காட்சிக்கு தனி ரேட்.. கண்டிஷன் போட்டு கல்லா கட்டிய தமன்னா

Trending News