சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ரீ என்ட்ரியில் கலக்கும் 5 80ஸ் நடிகர்கள்.. மொத்த நடிகர்களையும் தூக்கி சாப்பிட்ட சுப்ரீம் ஸ்டார்

Actor Sarath Kumar: தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பினை தக்க வைத்துக் கொண்டு முன்னணி ஹீரோவாய் வலம் வந்த நடிகர்கள், இன்றும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்கள்.

80ஸ் காலகட்டத்தில் இவர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படங்கள் ஏராளம். மேலும் தற்பொழுது ஹீரோவாய் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனக்கு கிடைத்த சப்போட்டிங் கேரக்டரில் சிறப்புற நடித்து படத்திற்கு வெற்றியை தேடி தருகின்றனர். அவ்வாறு ரீ என்ட்ரி கொடுத்த 5 80ஸ் நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: ஒரு வருஷம் சம்பவம் செய்யப் போகும் விஜய்.. லியோவை மிஞ்சிய தளபதி 68 ரிலீஸ் அப்டேட்

செல்வா: அந்த காலகட்டத்தில், ஓரளவு இவரின் படங்களுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தன்னை முன்னனி நடிகராக தக்க வைத்துக் கொள்ள இவர் எடுத்த முயற்சிகள் கை கொடுக்காமல் சினிமாவிற்கு இடைவெளி விட்ட இவர் 2010ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து வலிமைப் படத்திலும் கமிஷனராய் களமிறங்கி இருப்பார்.

ஜி எம் சுந்தர்: இவர் முன்னாள் ஆக்டர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இருப்பினும் புன்னகை மன்னன் படத்தில் கே பாலச்சந்தரரால் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் பல படங்களில் சப்போட்டிங் ஆக்டர் ஆகவும், வில்லன் காதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து சினிமாவிற்கு இடைவெளி விட்ட காணப்பட்ட இவர் சார்பட்டா பரம்பரையில் துரைக்கண்ணு வாத்தியாராய் சிறப்புற நடித்திருப்பார். அதை தொடர்ந்து வலிமை, விருமன், துணிவு போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ஆக்டராய் கலக்கி வருகிறார்.

Also Read: பிட்டுப்பட நடிகையுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. அத காப்பாத்திக்கோங்க என அபாய சங்கு ஊதியாச்சு

சரத்குமார்: பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சரத்குமார். இவரின் வெற்றி படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராய் வலம் வந்த இவர் இடையில் அரசியலில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தற்பொழுது பொன்னியின் செல்வன், வாரிசு, ருத்ரன், போர் தொழில் போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ஆக்டராய் தன் நடிப்பின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டி வருகிறார்.

அர்ஜுன்: 80ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகராய் பல வெற்றி படங்களை கொடுத்து ஆக்சன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் தான் அர்ஜுன். படத்தில் இவரின் சண்டைக் காட்சிகளுக்கென்று முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக இன்று வரை தக்க வைத்து வரும் இவர் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது விஜய் படமான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் கமிட்டாகியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிளாப் படங்களை கம்மியா கொடுத்த 2 ஹீரோக்கள்.. விஜய், அஜித் எல்லாம் இந்த லிஸ்ட்ல இல்ல

அரவிந்த்சாமி: தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் இயக்குனர் மணிரத்னம் மூலம் தளபதி படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் ஹிட் கொடுத்தது. அதன்பின் சினிமாவிற்கு  இடைவெளி விட்ட இவர் கடல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் இருப்பினும் அப்படம் அவருக்கு பெருதளவு கை கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து தனி ஒருவன் படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. சமீபத்தில் கஸ்டடி படத்திலும் நடித்த இவர் நரகாசுரன், கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Trending News