திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கூச்சநாச்சமே இல்லாம வெளிவந்த ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. கேரியரையே தொலைத்த கௌதம் கார்த்திக் 

தமிழ் சினிமாவில் வெளிவரக்கூடிய ஒரு சில படங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய படமாகவே அமைந்திருக்காது. ஏனென்றால் அப்படத்தில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள் மிக மோசமானதாகவே அமைந்திருக்கும். அப்படியாக கூச்சநாசமே இல்லாமல் வெளிவந்த 5 “ஏ” சர்டிபிகேட் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

திரிஷா இல்லனா நயன்தாரா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் ஜிவி பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இரண்டு நாயகிகளுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். அதிலும் படத்தில் வரும் வசனங்கள் மற்றும் பாடல்கள் மிகவும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு அமைக்க பெற்றிருக்கும். மேலும் இப்படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்காது.

Also Read: மாணவிக்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல்.. குவிந்து வரும் பாராட்டுகள்.

ஹர ஹர மகா தேவகி: சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான குற்றவியல் காதல் திரைப்படம் ஆகும். இதில் கௌதம் கார்த்திக் உடன் நிக்கி கல்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு பாலமுரளி இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் வரக்கூடிய காட்சிகள் கண் கூசும் அளவிற்கு மிக மோசமாகவே அமைந்திருந்தது.

இருட்டு அறையில் முரட்டு குத்து: ஞானவேல் ராஜா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இதில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனது திரைபயணத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த கௌதம் கார்த்திக் இதுபோன்று மோசமான காட்சிகள் இடம்பெறக் கூடிய படங்களில் நடித்ததன் மூலம் தனது கேரியரையே கெடுத்துக் கொண்டார்.

Also Read: மிரட்டிய கௌதம் கார்த்திக், கலங்க வைத்த புகழ்.. ஆகஸ்ட் 16 1947 எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

90 ML: அனிதா உதீப் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான  நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் ஓவியா முக்கிய ரோலில் நடிக்க ஆன்சன் பால், மசூம் சங்கர், மோனிஷா ராம் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஓவியா உடன் சேர்ந்து மற்ற பெண்கள் பேசும் வசனங்கள் இரண்டு அர்த்தங்கள் உடையதாக கேட்கவே அருவருப்பாக அமைந்திருக்கும். மேலும் பிக் பாஸ்க்கு பின்னர் ஓவியா நடித்த இப்படம் அவரின் கேரக்டரையே மாற்றும் அளவிற்கு அமைந்திருந்தது.

பல்லு படாம பாத்துக்க: விஜய் வரதராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் பல்லு படாம பாத்துக்க. இதில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா செட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் சரிவரப்பட வாய்ப்புகள் அமையாததால் தினேஷ் இது போன்ற மோசமான காட்சிகள் இடம் பெறக்கூடிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே சந்தித்தது.

Also Read: பிக் பாஸ் போனது தான் நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்

Trending News