வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இறந்த பின்னும் கொண்டாடக்கூடிய 5 நடிகர்கள்.. நலிவுற்ற நடிகர்களுக்கு மறுவாழ்வு தந்த சின்னக் கலைவாணர்

5 Unforgettable Celebrity Deaths: பிறப்பையும் இறப்பையும் யாராலும் நிறுத்தி வைக்க முடியாது. இருப்பினும் சமீபத்தில் எதிர்பாராத நேரத்தில் ஐந்து திரை பிரபலங்கள் திடீரென்று மரணித்து திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினார். ஆனால் அவர்கள் இந்த மண்ணை விட்டு சென்றாலும் இன்றும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பல நடிகர்களை வாழ வைத்தவர்கள். அதிலும் விவேக்கை நினைத்து அனுதினமும் நடிகர்கள் அழுது கொண்டிருக்கின்றனர்.

மயில்சாமி: தமிழ் திரை உலகின் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ்பெற்றவர்  நடிகர் மயில்சாமி. இவர்  இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் திடீரென்று மாரடைப்பால் இறந்தார் இவருடைய மரணத்தை இன்றும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. காமெடி நடிகராக மட்டுமல்லாமல் மேடை நாடகம், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமை கொண்ட மயில்சாமி, டாப் நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் எந்தவித ஈகோவையும் காட்டாமல் அனுதினமும் வாக்கிங் செல்லும் போது ரோட்டு கடையில் தான் டீ சாப்பிடுவார்.

அங்கு இருப்பவர்களுக்கும் டீ வாங்கிக் கொடுத்து கலகலப்பாக உரையாடக் கூடிய மனிதர். இவர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்த காமெடி நடிகர்களான முத்துக்காளை, போண்டாமணி போன்ற நடிகர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். இவையெல்லாம் அவர் மறைவுக்கு பிறகு தான் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் உதவி செய்வதற்கு பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் நகைகளை விற்று கூட ஏழ்மையில் வாடிய சக நடிகர்களின் வீட்டில்  அடுப்பெரிய வைத்தவர்.

விவேக்: தமிழ் சினிமாவில் காமெடிகளில் சமூக சிந்தனைகளை விதைத்து மக்கள் மனதில் புகுத்தியவர் தான் சின்னக் கலைவாணர் விவேக். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் திடீரென்று மரணமடைந்தார். இவரின் இழப்பு தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாத இழப்பு என இன்றும் திரை கலைஞர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

அவர் மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் மற்றும் சமூகப் பணிகள் இன்னும் அவரை நினைவு கூற வைக்கிறது. இவர் நலிவுற்ற நடிகர்களின் மருத்துவ செலவை பார்த்துக் கொள்வார். அது மட்டுமல்ல திரை கலைஞர்களின் பிள்ளைகளின் படிப்புக்கு கூட உதவுவார். 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது இவருடைய கனவு. அவரது கனவை இப்போது அவருடைய ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Also read: இந்த நாலு பேருக்கு கடைசி படமாக அமைந்த இந்தியன் 2.. ரஜினி, கமலுடன் முடிந்து போன குணசேகரனின் சகாப்தம்

புனித் ராஜ்குமார்: கன்னட திரை உலகில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார், கடந்த 2022 ஆம் ஆண்டு காலமானார். 46 வயதில் திடீர் மரணம் அடைந்த அவரது மறைவு திரை உலகை மட்டுமல்ல ரசிகர்களையும் சோகத்தில் வாட்டியது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, பாடகர் என பலவற்றுள் தன்னை ஈடுபடுத்தி, சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு தான் வாரி வழங்கினார்.

சக்தி மாதா என்ற சேவை மையத்தை நடத்தி வந்தார். இதுவரை 15 பள்ளிகளை நடத்தி ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை கொடுத்தார். 16 முதியோர் இல்லங்களை தனது சொந்த காசிலேயே நடத்தி வந்தார். 1800 பள்ளி மாணவர்கள் படிக்க வழிவகை செய்துள்ளார்.

மனோ பாலா: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் தான் மனோபாலா. இவர் இந்த வருடம் உடல்நல பிரச்சனை காரணமாக திடீரென்று உயிரிழந்தார். 68 வயதாகும் மனோபாலா காமெடி நடிகராக பலரையும் சிரிக்க வைத்தவர்.

அதற்கு முன்பு சுமார் 15 படங்களுக்கு மேல் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார். சினிமாவில்  இவருக்கு இருந்த ஈடுபாடு தான் அவரை  தொடர்ந்து பயணிக்க வைத்தது. அதிலும் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்து மறுபடியும் படத்தில் நடிக்க வந்தவர். இவருடைய மறைவும் திரை பிரபலங்களையும் ரசிகர்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.

Also read: துக்கம் தொண்டை அடைக்க செய்த 5 மாரடைப்பு மரணங்கள்.. விவேக் முதல் மாரிமுத்து வரை

எஸ் பி பாலசுப்ரமணியம்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பயணித்தவர்.  இவருக்கு ‘பாடும் நிலா’ என்கின்ற புனைப் பெயரும் உண்டு. காரணம் நிலாவை மையமாக வைத்து ஏராளமான பாடல்களை பாடியவர்.  

பாடகராக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம்  ஆகிய மொழிகளில் 48 படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது, பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை பெற்ற எஸ்பிபி, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென்று  உயிரிழந்தார். இவரது மறைவு ஈடு இணையற்றது.

Trending News