வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

மணிரத்தினம் கையில் ஒப்படைத்தும் 5 நடிகர்களுக்கு பலிக்காத பச்சா.. மம்முட்டிக்காக எடுத்த படம்

5 actors can’t grow even if they hand over the Director Mani Ratnam: ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான வசனத்துடன் வித்தியாசமான காதல் கதைகளை கொடுத்து கோலிவுட்டின் அடையாளமாக பார்க்கப்பட்டவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய கையில் ஐந்து நடிகர்களை ஒப்படைத்தும், அவர்களால் சினிமாவில் எதிர்பார்த்த இடத்தை பிடிக்காமல் திணறுகின்றனர்.

திருடா திருடா ஆனந்த்: 90களில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஆனந்த், மணிரத்தினம் எழுதி இயக்கிய திருடா திருடா படத்தின் மூலம் லீட் ரோலில் நடித்தார். இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் ஆனந்த் இருவரும் ஹீரோவாக நடித்தனர். மணிரத்தினத்தின் படத்திற்கு பிறகு சினிமாவில் ஹீரோவாக ரவுண்டு கட்டப் போகிறோம் என்ற கனவுடன் இருந்த ஆனந்திற்கு திருடா திருடா படத்திற்கு பிறகு இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பின் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குறைய துவங்கியதால் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லனாக நடித்து கடைசியில் இப்போது சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கௌதம் கார்த்திக்: நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவின் மகளான துளசி இருவரும் சினிமாவிற்கு அறிமுகமான படம் தான் கடல். இந்த படத்தை மணிரத்தினம் தான் இயக்கினார். பொதுவாக மணிரத்தினத்தின் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி தான் கடல் படத்தையும் நினைத்தனர். ஆனால் இது மணிரத்தினம் இயக்கிய படமா என பலரும் கழுவி ஊற்றினார்கள்.

ராதா மற்றும் கார்த்திக் இருவரும் மணிரத்தினத்தை நம்பி தான் தங்களுடைய வாரிசுகளை அவருடைய கையில் ஒப்படைத்தார்கள். ஆனால் கடல் படம் அவர்களுக்கு எதிர்பார்த்த மாதிரி அமையாமல் இன்றும் கௌதம் கார்த்திக் முன்னணி நடிகராக மாற முடியாமல் திணறுகிறார். அதே சமயம் துளசியும் இப்போது படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

Also Read: எதிர்காலத்தில் சினிமாவிற்கு வர போகும் பிரபலங்களின் வாரிசுகள்.. கோலிவுட்டை மிரட்டும் நெப்போடிசம்

மணிரத்தினம் கையில் ஒப்படைத்தும் வளர முடியாத ஐந்து நடிகர்கள்

மனோஜ் பாரதிராஜா: இயக்குனர் இமயம் பாரதிராஜா தன்னுடைய மகன் மனோஜ் பாரதிராஜாவை எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் மணிரத்தினம் கையில் ஒப்படைத்தார். ஆனால் மணிரத்தினத்தின் லாஜிக் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஒர்க்கவுட் ஆகவில்லை.

ஏனென்றால் மனோஜ் பாரதிராஜாவை ஹீரோவாக வைத்து பாரதிராஜா இயக்கத்தில் மணிரத்தினம் கதையில் உருவான தாஜ்மஹால் படம் என்னதான் ரசிக்கக்கூடிய படமாக இருந்தாலும், அந்த படத்திற்குப் பிறகு மனோஜ் பாரதிராஜாவின் சினிமா கேரியரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தாலும் தாஜ்மஹால் படத்தில் அவரை பக்கா ஹீரோவாக காண்பிப்பதற்கு நிறைய விஷயங்களை மணிரத்தினம் திரைக்கதையில் திணித்து பார்த்தார். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகல.

விக்ரம் பிரபு: செவாலியர் சிவாஜி கணேசனின் பேரனான விக்ரம் பிரபு அவருடைய தந்தை பிரபு போலவோ அல்லது அவரது தாத்தா போனவோ சினிமாவில் எதிர்பார்த்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இவரையும் மணிரத்தினம் தூக்கிவிட பார்த்திருக்கிறார். அப்படித்தான் வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னம் விக்ரம் பிரபுவுக்காகவே தயாரித்து வசனங்களும் எழுதினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடல.

துல்கர் சல்மான்: மணிரத்தினம் டைரக்ஷனில் வித்தியாசமான காதல் கதையாக வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மான் ரொமான்டிக் ஹீரோவாக நடித்தார். இந்த படம் லிவிங் ரிலேஷன்ஷிப்பை காண்பித்ததால் அந்த காலத்து பெருசுகளை முகம் சுளிக்க வைத்தது. இந்த படத்தை மணிரத்தினம் துல்கர் சல்மானின் தந்தை மம்மூட்டிக்காகவே அவருடைய மகனை கதாநாயகனாக வைத்து எடுத்தார்.

Also Read: மணிரத்னத்தால் முடியாமல் போன காரணம் காரியம்.. மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்

- Advertisement -spot_img

Trending News