திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வளரத் துடிக்க போராடும் 5 இளம் நடிகர்கள்.. அப்படி முத்திரை குத்தப்பட்ட அசோக் செல்வன்

சினிமாவில் நுழைவதற்கு அழகும் திறமையும் இருந்தால் பத்தாது. கண்ணுக்குத் தெரியாத அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என சில நடிகர்களை பார்த்தால் தோன்றுகிறது. அப்படிதான் கோலிவுட்டில் தற்போது வளரத் துடிக்கும் 5 நடிகர்கள் ஆளுக்கு ஒரு தடங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

அசோக் செல்வன்: எல்லா கேரக்டர்களிலும் கச்சிதமாக பொருந்தியிருக்கும் நடிகர் அசோக் செல்வன், தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார். இருப்பினும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை போன்ற படங்கள் இவரை ஒரு சப்போர்ட் ஆக்டராகவே முத்திரை குத்திவிட்டது. ஆனால் அந்த இமேஜில் இருந்து இவர் வெளிவர முயற்சி செய்தாலும், அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளே இவரை தேடி வருகிறது.

அஸ்வின் ககுமனு: மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அஸ்வின் ககுமனு அதன்பிறகு ஏழாம் அறிவு,, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, வேதாளம், ஜீரோ போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். இவர் ஹீரோவாக நடிப்பதற்கான முக அமைப்பு இருந்தாலும், கோலிவுட்டில் வளரத் துடித்துக்கொண்டிருக்கும் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் செய்யும் அட்டூழியம்.. ஹாஸ்டல் படம் எப்படி இருக்கு.?

இருந்தபோதிலும் பெரிய பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அஸ்வின், இந்த மாதம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரிலீஸாகும் பொன்னியின் செல்வன் படத்தில் சேந்தன் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு இவரது சினிமா கேரியரில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறார்.

காளிதாஸ் ஜெயராம்: பிரபல நடிகர் ஜெயராம் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான காளிதாஸ், 2016 ஆம் ஆண்டு வெளியான மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி வளரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் இவர் நடிக்கும் படங்களின் கதைகளை சரியாக தேர்வு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற சர்ச்சைக்குரிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அச்சு அசலாக விஜய், சூர்யா, சிம்பு போல மிமிக்ரி செய்யும் காளிதாஸ் ஜெயராம்

 ஹரிஷ் கல்யாண்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹரிஷ் கல்யாண், அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்பு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே, இன்ஸ்பெக்ட் ராஜாவும் இதய ராணியும், பியார் பிரேமா காதல், ஓ மனப் பெண்ணே  போன்ற படங்களில் எல்லாம் ரொமான்டிக் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளரும் நாயகனாக வலம் வந்தார். இருப்பினும் இவர் 2 கதாநாயகன் படங்களில் நடித்ததால், அழகும், திறமையும் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவிக்கிறார்.

கலையரசன்: பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஸ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களின் படங்களில் துணை நடிகராகவே நடித்துக்கொண்டிருக்கும் கலையரசன் அவர்கள் ராஜமுந்திரி,  டார்லிங் 2 போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இருப்பினும் இவருக்கு துணை நடிகராக நடிப்பதில் கிடைத்த பெரும் புகழும் கதாநாயகனாக நடித்த படங்களில் கிடைக்காததால், சப்போர்ட் கேரக்டர்கள் அமையும் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்.

Also read: தன் மனைவி மற்றும் மகளுடன் மெட்ராஸ் கலையரசன். க்யூட் போட்டோஸ் உள்ளே.

இவர்களெல்லாம் அழகும் திறமையும் இருந்தும் சப்போர்ட் ஆக்டராகவே நடித்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் மறைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அமையா விட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Trending News