புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அரசியலால் விஜயகாந்தை பிரிந்த 5 நடிகர்கள்.. பணம் பத்தும் செய்யும்

5 actors lost because of Vijayakanth’s entry into politics: அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்தியவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தயுமே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கேப்டன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்ததால் ஐந்து பிரபலங்கள் அவரை இழந்து திக்கு முக்காடினார்கள். அதேசமயம் கேப்டனால் வளர்த்து விடப்பட்டவரே அவருக்கு எதிராக திரும்பி முதுகில் குத்தி விட்டார்.

இப்ராஹிம் ராவுத்தர்: விஜயகாந்த்- இப்ராஹிம் ராவுத்தர் இருவரின் நட்பு ஊரறிந்த விஷயம்தான். இவர்கள் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே ஒன்றாக இணைந்து ஓடி ஆடி விளையாண்டு, மதுரை வீதியில் இருவரின் கால் பதியாத இடமே இல்லை. அந்த அளவிற்கு கேப்டனுக்கு நெருக்கமாக இருந்தவர்தான் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். மதுரையில் துவங்கிய இவர்களின் நட்பு, சென்னையில் சினிமா வாய்ப்பை தேடும் வரை தொடர்ந்து, இருவரும் வெற்றி பெற்று மகுடம் சூடும் வரை பயணித்தது.

சினிமா கம்பெனியை துவங்கி, எந்த இடத்திற்கு போவது என்றாலும் இரண்டு பேருமே சேர்ந்து தான் போவார்களாம். ஒட்டி பிரியாத இரட்டையர்களாக இருந்த இவர்களின் நட்பு, விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்ட பிறகு உடைந்தது. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி எல்லா முடிவுகளையும் பிரேமலதா தான் எடுத்து, ராவுத்தரை ஓரம் கட்டி விட்டார்.

இது கேப்டனுக்கு பிடிக்காவிட்டாலும் வேறு வழி இல்லாமல் மனைவி சொல்லே மந்திரம் என ராவுத்தரை விட்டு தள்ளி வந்தார். தன்னுடைய ஆருயிர் நண்பனை பிரிந்து விட்டோமே! என்ற கவலையில் தான் கேப்டனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எல்லா கண்ட்ரோலையும் பிரேமலதா எடுத்துக் கொண்டு ராவுத்தர்- கேப்டன் இருவரின் நட்பை பிரித்து விட்டார். அதுமட்டுமல்ல ராவுத்தரின் இறுதி சடங்கில் விஜயகாந்த் கதறி கதறி அழுதார்.

அருண்பாண்டியன்: எண்பதுகளில் விஜயகாந்த்க்கு இருந்த இன்னொரு நெருங்கிய நண்பர் நடிகர் அருண் பாண்டியன். இவர்களின் நட்பு சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தொடர்ந்தது. விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கிய போது, அவருடன் பயணித்த அருண் பாண்டியன் அதன் பின்பு தேமுதிகாவின் இருந்து அதிமுகவிற்கு சென்ற சட்ட உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

Also Read: விஜயகாந்த், ராவுத்தரை பிரிக்க நடந்த சூழ்ச்சி.. கேப்டன் எடுத்த முடிவின் பின்னணி

விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததால், இழந்த 5 நடிகர்கள்

ராதா ரவி: கோலிவுட்டில் கேப்டனுக்கு நெருக்கமானவர்களில் ஒருவர் நடிகர் ராதாரவி. இவர்கள் இருவருமே சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு வந்தவர்கள். பல மேடைகளில் ராதாரவி தனக்கும் விஜயகாந்த்க்கும் இடையே இருக்கும் நட்பை பற்றி பேசுபவர். 80, 90களில் நெருக்கமாக இருந்த இவர்களது நட்பு, கேப்டன் அரசியலில் தீவிரமாக இறங்கிய பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பிளவுபட்டது. கடைசியில் விஜயகாந்த் உடம்பு சரியில்லாத சமயத்தில் கூட கடைசி முறையாக பார்த்து விடலாம் என முயற்சித்த போது இருவரும் சந்தித்து பேசுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தியாகு: விஜயகாந்த் இறந்த செய்தி வெளியான உடனே, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி கதறி அழுதவர் நடிகர் தியாகு. ஏனென்றால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமானது. பெரும்பாலும் கேப்டன் படங்களில் எல்லாம் நடிகர் தியாகுவை பார்க்க முடியும். சுமார் 25 படங்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின் அவரை இழந்த நடிகர்களுள் நடிகர் தியாகுவும் ஒருவர்.

வடிவேலு: இவர் கேப்டனுடைய படத்தின் மூலம் தான் காமெடி நடிகராக தெரிந்தார். வடிவேலு சினிமாவில் உச்ச காமெடி நடிகராக வளர்வதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான். ஆனால் அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லாமல் கேப்டன் அரசியலுக்கு வந்த பின், அவருக்கு எதிராக இருந்த திமுக கட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, மேடைகளில் அவரை குடிகாரன் போலவே சித்தரித்து பேசினார்.

‘கப்பலை ஓட்டுறவன் தான் கேப்டன். எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டன் கிடையாது. நேத்து வந்தவன், உனக்கு முதலமைச்சர் சீட்டு கேக்குதா!’ என்றெல்லாம் விஜயகாந்தை தர குறைவாக பேசினார். அது மட்டுமல்ல வடிவேலும் ஓவரா ஆடியதற்காக அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து படங்களில் நடிக்க விடாமல் வைத்திருந்தனர். அப்போது கூட விஜயகாந்த், ‘வடிவேலு பிறவிக் கலைஞர். அவன நடிக்க விடுங்கள்’ என்று தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கொடுக்கும்படி சிபாரிசு செய்தார். இருந்தாலும் ஒரு கூட்டம் விஜயகாந்தை கோமாளி போல சித்தரித்து அவரது அரசியல் வாழ்க்கையை சீரழித்தனர், அதில் முக்கியமானவர் வடிவேலு. விஜயகாந்த்க்கு வடிவேலு நண்பராக இல்லாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வந்த பின் பச்சோந்தியாக மாறி முதுகில் குத்தி விட்டார்.

Also Read: விஜயகாந்த் இறந்த பிறகு எழும் 5 கோரிக்கைகள்.. பிரேமலதா ஆசை நிறைவேறுமா?

Trending News