திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புகழ் போதையில் அடாவடியாய் கேரியரை தொலைத்த 5 நடிகர்கள்.. முதலிடம் நம்ம விஜய் தம்பிக்கு தான்

Tamil Actors: சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அடாவடியால் கேரியரை தொலைத்த 5 நடிகர்கள் பற்றி பார்ப்போம். அதிலும் விஜய்யின் ரீல் தம்பி கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போட்டதால் மார்க்கெட்டை இழந்து தவிக்கிறார்.

பாபி சிம்ஹா: தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள பாபி சிம்ஹா, என்னதான் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் வில்லத்தனத்திற்கு இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ஆனால் சமீப காலமாகவே இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் முழு காரணம் அவருடைய வாய் தான். ‘தவளை தன் வாயால் கெடும்’ என்பது போல இவர் நிறைய பேட்டிகளில் வாய்க்கொழுப்பல் ஓவராக பேசி சீரழிந்தார்.

குறிப்பாக ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் 2ம் பாகத்தில் அவருக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் சரியாக கொடுக்கவில்லை என கிடைத்த வாய்ப்பை தூக்கி எறிந்தது மட்டுமல்லாமல், தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் நடிக்கப் போகிறேன் என்றும் கெத்து காட்டினார். இப்படி எல்லாம் செய்ததுதான் அவருடைய மார்க்கெட் சரிந்ததற்கு முக்கிய காரணம்.

Also Read: ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 ஜோடி.. சினேகாவின் மீது காதல் வலையில் விழுந்த பிரசன்னா

விமல்: ‘ஆழம் தெரியாமல் கால விடக்கூடாது’ என்பதை சுத்தமாக மறந்த விமல், படத்தை தயாரிக்கப் போகிறேன் என்று பண மோசடியில் சிக்கினார். இவர் முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக தான் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். ரொம்பவே எதார்த்தமாக விமல் நடித்திருந்த களவாணி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக களவாணி 2 படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்க வேண்டும் என்ற பேராசையில் தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் என்பவரிடம் 1.5 கோடி கடனாக பெற்று இருக்கிறார்.

வாங்கிய கடனை திருப்பி தராததால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல அவருடைய மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக தன்னுடைய நண்பர் கோபி என்பவரிடம் சிங்கார வடிவேலன் மேலும் 5 கோடி ரூபாயை விமலிடம் கொடுத்ததாகவும் அடுத்தடுத்த புகார்களை காவல்துறையிடம் அளித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட விமல் இப்போது சுத்தமாகவே மார்க்கெட் இழந்து தவிக்கிறார்.

ஜெய்: தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன பகவதி என்ற படத்தில் விஜய்யின் தம்பியான குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெய், வெகு சீக்கிரமே ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றார். இவரை தளபதியின் தம்பியாகவே ரசிகர்களும் பார்க்க தொடங்கினர். அதன் காரணமாக இவருடைய ஆரம்ப கால படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது.

ஆனால் பொது இடங்களில் கொஞ்சம் ஓவராகவே திமிரு காட்டிய ஜெய்யின் நடவடிக்கை ரசிகர்களுக்கு மட்டுமல்ல பிரபலங்களுக்கும் சுத்தமாகவே பிடிக்காமல் போனது. இதனால் இவருடைய சமீப கால படங்கள் அனைத்தும் படுதோல்வி சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது ஜெய்க்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இரண்டாம் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க மறுத்த 5 நடிகர்கள்.. முரளியால் தளபதிக்கு கிடைத்த மிகப்பெரிய திருப்பம்

அதர்வா: முரளியின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அதர்வா, தன்னுடைய அப்பாவின் பெயரை கெடுக்கும் அளவுக்கு பல வேலைகளை பார்த்து வருகிறார். அதிலும் அதர்வாவின் மீது சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் இவருடைய கெட்ட சவகாசம் தான் காரணம். கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை செய்கிறார்.

அதுமட்டுமல்ல படப்பிடிப்புக்கு வந்ததும் நடிகைகளிடம் அதிக நேரம் செலவு செய்துவிட்டு டேட்டிங் செய்வதில் தான் குறியாக இருக்கிறார். அதர்வாவிற்கு குடிப்பழக்கமும் இருப்பதால் இவருடைய சேர்க்கை தான் சரியில்லை என பல மூத்த நடிகர்கள் கண்டித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது அதர்வாவின் படங்களும் சரியாக ஓடுவதில்லை. சுத்தமாகவே மார்க்கெட்டை இழந்த அதர்வா, கேடுகெட்ட சவகாசத்தால் தன்னுடைய கேரியரையும் தொலைத்து விட்டார்.

Also Read: விஜய் டாட்டா காமித்து கழட்டிவிட்ட 5 இயக்குனர்கள்.. வாரிசுக்கு பின் ஒரு பயம் இருக்குமா இல்லையா

ஆரி: ஆடும் கூத்து என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகர் ஆரி, அதன் பிறகு ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்ட சுழி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். அதன் தொடர்ச்சியாக வந்த நெடுஞ்சாலை படம் தான் ஆரிக்கு நல்ல பேரைப் பெற்றுத் தந்தது.

அதன்பின் இவர் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டில் வின்னர் ஆனார். இவர் அந்த நிகழ்ச்சியில் நேர்மையுடன் நடந்து கொண்டதாகவும், இளைஞர்களை நல்வழி படுத்தியதாகவும் ஓவராக தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதால், புகழ் தலைக்கேறி தலைகால் புரியாமல் ஆடினார். அதன் பிறகு இவருக்கு இப்போது சுத்தமாகவே மார்க்கெட் இல்லாமல் தன்னுடைய கேரியரை தொலைத்து விட்டார்.

இவ்வாறு இந்த 5 நடிகர்களும் தான் புகழின் உச்சத்திற்கு சென்ற பின் திமிரு தலைக்கேறி தங்களது கேரியரை தொலைத்து, இப்போது ஒன்றுமில்லாமல் போய் விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த லிஸ்டில் விஜய்யின் ரீல் தம்பி ஜெய்க்கு தான் முதலிடம்.

Trending News