ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

வாத்தியாய் அதிரவிட்ட 5 ஹீரோக்கள்.. ஓவர் அலப்பறையில் ஸ்கோர் செய்த வைரஸ்

5 Actors: கல்வியை புகட்டும் வாத்தியார் கதாபாத்திரம் ஏற்றி நடித்த ஹீரோக்கள் ஏராளம். இருப்பினும் வாத்தியாய், தன் எதார்த்தமான நடிப்பினை வெளிகாட்டி மாஸ் ஹிட் பெற்ற படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு அதிரவிட்ட 5 ஹீரோக்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

 கமல்: 1987 ஆம் ஆண்டு கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நம்மவர். இப்படத்தில் கமல், கவுதமி, கரண், நாகேஷ், ஸ்ரீ வித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வழிகாட்டுதல் இல்லாமல் செயல்படும் இளம் தலைமையினருக்கு எடுத்துக்காட்டாய் இப்படத்தின் கதை அமைந்திருக்கும். மேலும் கமலின் நடிப்பில் இப்படம் மாபெரும் ஹிட் கண்டது.

Also Read: தனுஷிற்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள்.. அடுத்த 5 வருடத்திற்கு மனுஷன் ரொம்ப பிஸி

சத்யராஜ்: 2012ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நண்பன். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மாணவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் ஹிட்லரை போல் கடுமையாக நடந்து கொள்ளும் வைரஸ் கதாபாத்திரத்தில் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார் சத்யராஜ். இவரின் நடிப்பும் இப்படத்தில் வெற்றியாய் பார்க்கப்பட்டு சுமார் 150 கோடி வசூலை பெற்றுத் தந்தது.

தனுஷ்: சமீபத்தில் வெங்கி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வாத்தி. இப்படத்தில் தனுஷ், சம்யுக்தாமோகன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கும் பிரைவேட் காலேஜ் உரிமையாளரை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் தனுஷ் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று 118 கோடி வசூலை பெற்று தந்தது.

Also Read: விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

விஜய்: 2021ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அருண் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். போதை கும்பலுக்கு எதிராய் செயல்பட்டு, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நண்பனாய் விஜய் நடிப்பில் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படம் சுமார் 250 கோடி வசூலை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி: 1988ல் முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தர்மத்தின் தலைவன். இப்படத்தில் ரஜினி, பிரபு, சுகாசினி, குஷ்பூ, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் பாலு ப்ரொபசர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். மேலும் தன்னுள் இருக்கும் மறதியை வெளிக்காட்டி ரஜினி மேற்கொள்ளும் நகைச்சுவை இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கும்.

Also Read: அழகை காப்பாற்றிக் கொள்ள ஊசி, கருக்கலைப்பு, கள்ளக்காதல்.. ரஜினி மருமகளின் மறுமுகம்

- Advertisement -spot_img

Trending News