வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

குண்டக்க மண்டக்க பேசி மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 நடிகர்கள்.. ராக்கெட் சர்ச்சையில் நாசமா போன பிரகாஷ்ராஜ்

5 Actors Spoiled Respect By Talking: திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் என்ன பேசினாலும் அது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். அதிலும் இந்த ஐந்து நடிகர்கள் வேனுக்குமென்றே எடுக்கு மடக்காய் பேசி சின்னா பின்னம் ஆகிவிட்டனர். அதிலும் ராக்கெட் சர்ச்சையால் பிரகாஷ்ராஜின் இமேஜ் சல்லி சல்லியாக நொறுங்கி விட்டது.

மன்சூர் அலிகான்: முரட்டு வில்லனாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான மன்சூர் அலிகான், சமீபத்தில் திரிஷாவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலானது.. இதில் லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் திரிஷாவுடன் படுக்கையறை காட்சி இருக்கும், அவரை புரட்டி எடுத்து விடலாம் என எதிர்பார்த்ததாக பேசி வாய கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டார். எப்போதுமே எடக்கு மடக்கா பேசும் மன்சூர் அலிகான்,  இப்போது திரிஷாவையும் பற்றி கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இவருக்கு எதிராக தற்போது மொத்தம் திரையுலகமே கண்டனம் தெரிவிக்கின்றனர்.

மிஷ்கின்: பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மிஷ்கினுக்கு வாய் கொழுப்பு கொஞ்சம் அதிகம். இவருக்கு இப்போது திரையுலகில் நல்ல பெயரை கிடையாது. ஏனென்றால் அந்த அளவிற்கு ஒவ்வொரு பேட்டிகளிலும் திமிருடனும் தெனாவட்டுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து பணிபுரியவே பிரபலங்களுக்கு யாருக்குமே பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு கெட்ட பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

சத்யராஜ்: கோயம்புத்தூர் பாஷை பேசி வில்லனாகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிய சத்யராஜ் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் டாப் நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய  பேச்சில் கோயம்புத்தூர் குசும்பு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். அதிலும் நக்மா, மீனா இருவரும் மேடையில் இருக்கும் போதே அவர்களை மரியாதை குறைவாய் பேசி, தன்னுடைய மரியாதை கெடுத்துக் கொண்டார்.

Also Read: நீங்க ஆம்பளையா, உங்களுக்கு எதுக்கு மீசை?. டாப் நடிகர்களை காரி துப்பும் ப்ளூ சட்டை

ராதாரவி: சீனியர் நடிகர் ஆன இவர், இப்போது இருக்கும் இளம் நடிகர் யாருக்குமே மரியாதை கொடுக்க மாட்டார். மேடைகளில் டாப் நடிகர் நடிகைகளை வாடா போடின்னு மரியாதை இல்லாமல் தான் பேசுவார். அதிலும் நயன்தாராவை பற்றி மேடையில் அசிங்கமாய் பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். ஆனால் அதை எல்லாம் சுத்தமாக கவலைப்படாத ராதாரவி, எப்போதுமே குண்டக்க மண்டக்க பேசி, தொடர்ந்து வம்பை இழுத்து வழியில் போட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்: சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சந்திராயன் 3 விண்கலத்தை விமர்சனம் செய்யும் வகையில் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சை ஆனது.

நிலவில் தரை இறங்கியதும் விக்ரம் லாண்டர் எடுத்த புகைப்படம் என்று, ஒருவர் தேநீர் ஆற்றுவது போல் கேலிச்சித்திரத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. இந்த பிரச்சனைக்கு பிறகு பிரகாஷ் ராஜின் இமேஜ் சல்லி சல்லியாக நொறுங்கியது.

Also Read: மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News