வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மரியாதையும், கண்ணியமும் தவறாத 5 நடிகர்கள்.. கட்டப்பாவுக்கு இப்படி ஒரு பெயரா!

Actor Sathyaraj: பொதுவாக சினிமாவில் கொஞ்சம் வளர்ந்து விட்டாலும் ஓவராக பந்தா காட்டுவார்கள். அவர்களிடம் நிறைய பழக்கமும் வந்துவிடும் என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த ஐந்து ஹீரோக்கள் மட்டும் இதில் தனித்துவமாக இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தாலும் மரியாதை மற்றும் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்கிறார்கள் அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

சமுத்திரக்கனி: இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் சமுத்திரக்கனி. ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இன்று தெலுங்கு சினிமா கொண்டாடும் கலைஞனாக இருக்கிறார். நடிப்பு மட்டுமே தொழில், அதை சரியாக செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர் இவர்.

சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.. சத்யராஜ் எப்போதுமே மனதில் பட்டதை மறைக்காமல் பேசக்கூடியவர். பிரச்சனையே வந்தாலும் உண்மையை பேச இவர் எந்த மேடையிலும் தவறியதே இல்லை.

Also Read:தமிழ் சினிமாவை கெடுத்து குட்டிச்சுவராக்கும் விஷயங்கள்.. உண்மையை போட்டுடைத்த சத்யராஜ்

டி.ராஜேந்தர்: நடிகர் டி. ராஜேந்தர் இயக்குனர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் நடிக்கும் படங்களில் நடிகைகளிடம் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்வாராம். அதே போன்று நடிகைகளுக்கு ரொம்ப கவர்ச்சியான காட்சிகளை வைப்பதில்லை. படங்களிலும் அப்படிப்பட்ட காட்சிகளை வைக்க மாட்டார்.

மம்மூட்டி: மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் நடிகராக இருக்கிறார். ஆனால் இவரிடம் எந்த பந்தாவும் இருக்காது. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமும் ரொம்பவும் மரியாதையாக நடந்து கொள்வாராம்.

பாக்யராஜ்: இந்திய சினிமா உலகில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் பாக்யராஜ். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய கதைகளை படமாக இயக்கி, நடித்து இருக்கிறார். பாக்யராஜுக்கு நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் கிடையாதாம். எல்லோரிடமும் பண்பாக பேசும் பழக்கம் உடையவர் கூட.

Also Read:இந்த 69 வருடத்தில் சத்யராஜின் வியக்க வைக்கும் மொத்த சொத்தின் மதிப்பு.. பல கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு

Trending News