ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

20 வயது ஆவதற்கு முன்னே ஹீரோவான 5 நடிகர்கள்.. இன்றுவரை பட்டையை கிளப்பும் தளபதி

Thalapathy Vijay: எல்லையே இல்லாத அசாதாரண திறமைகளின் வெளிப்பாடுதான் இந்த நடிகர், நடிகைகள். 20 வயதை அடைவதற்கு முன்பே, தங்களின் குறிப்பிடத்தக்க நடிப்புகள் மூலம் அவர்களுக்கு என தனித்துமான பெயர்களை உருவாக்கிக்கொண்டவர்கள் பலர் , அதில் முக்கியமான இந்த 5 நடிகர்கள் பற்றி பாக்கலாம். இவர்கள் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் : தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி கதாநாயகர்களுள் தனுஷும் ஒருவர். தன்னுடைய 19 வயதிலேயே அவரின் சகோதரர் செல்வராகவன் இயக்கி, தந்தை கஸ்தூரிராஜா தயாரிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read:தளபதி 68ல் விஜய் நடிக்கப் போகும் கேரக்டர் இதுதான்.. நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் தயாராகும் சம்பவம்

சிம்பு : எஸ் டி ஆர் என அழைக்கப்படும் சிலம்பரசன் தனது 19 வயதிலேயே , அவரின் தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான “காதல் அழிவதில்லை” எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படத்திற்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இவர் கதாநாயகனாக திரை உலகுக்கு அறிமுகம் ஆகும் முன்னரே குழந்தை நட்சத்திரமாக அவரின் தந்தை இயக்கத்தில் வெளியாகும் பல படங்களில் நடித்துள்ளார்.

பிரஷாந்த்: 1990களில் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்த நடிகர் பிரஷாந்த் தியாகராஜனும் இவர்களுள் ஒருவர். தனது 17வயதிலேயே கதாநாயகனாக நடித்தார். ராதா பாரதி இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நடித்தார். இவரின் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read:அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

விஜய்: தளபதி விஜய் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில்வெற்றி படத்தில் நடித்திருக்கிறார். பிறகு இவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, தாய் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இத்திரைப்படம் வசூலை குவித்தது. தனது சிறந்த நடிப்பின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகர் விருது பெற்றார்.

எம்ஜிஆர்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது 19 வயதில் எல்லிஸ் ர்.டுங்கண் இயக்கத்தில் 1936ஆம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. இவர் தனது சிறந்த நடிப்பின் வாயிலாக ரசிகர்களை கவர்ந்தார். எதிர்பார்த்த அளவுக்கு இத்திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்தது.

Also Read:6 வாரத்திற்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த லியோ.. சூடு பிடிக்கும் டிக்கெட் முன் பதிவு

- Advertisement -spot_img

Trending News