திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நல்ல திறமை இருந்தும் வாயால் அழிந்த 5 இளம் நடிகர்கள்.. 2 கோடிக்கு வலை விரிக்கும் ஜெய் பீம் மணிகண்டன்

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் என்ட்ரி கொடுத்த 5 இளம் நடிகர்கள் நல்ல திறமை இருந்தும் தங்களது வாய்க்கொழுப்பால் வளர முடியாமல் தவிக்கின்றனர். அதிலும் ஜெய் பீம் மணிகண்டன் கோடிகளுக்கு வலை விரித்து காத்திருக்கிறார்.

அஸ்வின் கக்குமானு: விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கான ஆடிஷனுக்காக சென்றபோது கௌதம் மேனன் உடைய உதவி இயக்குனர்களால் கவனிக்கப்பட்ட அஸ்வினுக்கு அடுத்ததாக நடுநிசி நாய்கள் படத்தில் சமீரா ரெட்டியின் காதலனாக நடிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பின் அஸ்வின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமல்ல சூர்யாவுடன் ஏழாம் அறிவு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சேந்தன் அமுதன் கேரக்டரிலும் நடித்திருப்பார். ஆனால் இவர் சில இடங்களில் வாய் துடுக்காக பேசி பெரிய பெரிய வாய்ப்புகளையும் இழந்து இருக்கிறார்.

அசோக் செல்வன்: பில்லா 2 படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய அசோக் செல்வன் அதன் பிறகு சூது கவ்வும், பீட்சா 2: வில்லா போன்ற படங்களில் நடித்தாலும் இவர் தெகிடி படத்தின் மூலம் ரசிகைகளின் கனவு கண்ணனாக மாறினார். இந்த படம் வெளியான போது அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருவதற்கு சான்ஸ் அதிகம் இருக்கிறது என பலரும் எண்ணினர். ஆனால் சில பேட்டிகளில் ஓவராக பேசி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். மேலும் அவர் அடுத்தடுத்து நடித்த படங்களும் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை.

Also Read: இந்த வாரம் தியேட்டரை குறிவைத்த 4 படங்கள்.. நாக சைதன்யாவுக்கு போட்டியாக வரும் ராசாகண்ணு

ஹரிஷ் கல்யாண்: சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெற்ற ஹரிஷ் கல்யாணத்துக்கு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. தற்போது தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே பிரபலம் இவானா உடன் எல்ஜிஎம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர் சில பேட்டிகளில் தன்னுடைய வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார்.

மணிகண்டன்: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனில் ரன்னர்- அப் ஆக வந்த மணிகண்டன், ஜெய் பீம் படத்தின் மூலம் உச்சம் பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு முன்பே நிறைய படங்களில் நடிகராகவும் எழுத்தாளராகவும் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் இவர் கதாநாயகனாக நடித்த குட் நைட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சுமார்10 வருடங்களுக்கு முன்பே சினிமாவில் கால் பதித்த மணிகண்டன் இப்போது தான் வளர்ச்சி பாதையில் செல்கிறார். இதற்கு காரணம் அவர் வெளிப்படையாக பேசும் குணம் தான். இந்த குணம் சிலருக்கு பிடிக்காமல் போவதால் பட வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் தற்போது இவருடைய பிரமிக்க வைக்கும் திறமைக்காக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இவர் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க போகிறார். அந்த படத்திற்கு 2 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

Also Read: Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்

அதர்வா: தந்தையிடம் இருந்த நிதானம் அதர்வாவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சுமார் 13 வருடங்களாக சினிமாவில் பல படங்களை அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கும் அதர்வா, அடுத்தடுத்த படங்களில் தோல்வியை தான் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய கதை தேர்வு ஒரு பக்கம் இருந்தாலும், நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசி மாட்டிக் கொள்கிறார். இதனால் தரமான படங்கள் இவரை விட்டு கைநழுவி சென்றது. டாப் இயக்குனர்களும் இவரை அணுக தயங்குகின்றனர்.

இவ்வாறு இந்த 5 நடிகர்கள்தான் வாய்க்கொழுப்பால் வளர முடியாமல் திணறும் பிரபலங்கள் ஆவார்கள். அதிலும் இப்போது ஜெய் பீம் பட மணிகண்டன் 2 கோடிக்கு பெரிய வலையை விரித்து வைத்திருக்கிறார்.

Also Read: உண்மை கதைக்காக வெற்றிகண்ட 5 படங்கள்.. சூர்யாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படம்

Trending News