ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

முதல் படமே கில்மாவாக நடித்த 5 நடிகர்கள்.. சீசின்னு முகம் சுளிக்க வைத்த நடிகர் ஆதி

Actor Aadhi: ஒரு நடிகரோ, நடிகையோ எத்தனை படங்களில் நடித்தாலும் அவர்களது முதல் படம் எப்போதுமே மறக்க முடியாத ஒன்றாகவே அமையும். அது தோல்வியானாலும் சரி, வெற்றியானாலும் சரி. அந்த வகையில் முதல் படத்திலேயே பார்க்கும் ரசிகர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு கில்மா படங்களை நடித்த 5 நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆதி பின்ஷெட்டி: தெலுங்கை பூர்வீகமாக கொண்ட நடிகர் ஆதி, ஈரம், யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் தமிழில் நடித்துள்ளார். அந்த வகையில் இவரது முதல் படம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் வகையில், காமக்கொடூரனாக ஆதி நடித்திருப்பார். இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான மிருகம் படத்தில் எய்ட்ஸ் நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதைக்களம் இருந்தாலும், இப்படம் பார்க்கவே முடியாத அளவுக்கு படுக்கையறை காட்சிகள் இருக்கும்.

Also Read: விக்ரம் போல கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம்

துருவ் விக்ரம்: நடிகர் விக்ரமின் மகனான இவர், தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாக வைத்து உருவாகும் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது முதல் படமான ஆதித்யா வர்மா, தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து செம ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காகும். முழுக்க, முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் அளவுக்கு மீறிய முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் துருவ் விக்ரம் நடித்திருப்பார்.

ஜி.வி.பிரகாஷ்: இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான அடியே படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடித்த முதல் படம் திரிஷா இல்லனா நயன்தாரா படு மோசமான இரட்டை அர்த்த வசனங்களுடன், கவர்ச்சி காட்சிகள் நிரம்பி வழியும். ஜி.வி பிரகாஷ் நடிப்பில் முதலில் வெளியான படம் டார்லிங், ஆனால் திரிஷா இல்லனா நயன்தாரா படம் தான் அவர் முதலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜிவி பிரகாஷ் வேண்டாம் நீங்க வாங்க.. பல வருடங்களுக்குப் பிறகு இணையும் ரெண்டு ராஜாக்கள்

தனுஷ்: 48 படங்களில் நடித்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் ஆரம்ப கால கேரியர் அவரது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவனால் தான் தொடங்கியது. அந்த வகையில் தனுஷ் நடித்த முதல் படம் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை. இப்படத்தில் தனுஷ் பார்க்க பள்ளி மாணவன் போல் நடித்திருந்தாலும், முகம் சுளிக்க வைக்கும் அளவில் படு கில்மா காட்சிகளில் நடித்திருப்பார்.

அமலாபால்: தமிழ், மலையாளம், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்த நடிகை அமலாபால், தற்போது மார்க்கெட்டில்லாமல் சுற்றி வருகிறார். தனுஷ், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபாலின் முதல் படம் மலையாளத்தில் வெளியான சிந்து சமவெளி. இப்படத்தில் புருஷன் இல்லாத சமயத்தில் மாமனாருடன், அமலாபால் ஜல்சா பண்ணும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இப்படம் பார்ப்போருக்கு முகம் சுளிக்க வைத்ததோடு, அமலாபாலின் கேரியருக்கே கரும்புள்ளியாக அமைந்தது.

Also Read: பழைய செல்வராகவன் கதையை நோண்டி எடுத்த தனுஷ்.. அஜித் மறுத்ததால் 3 ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயாராகும் ஹீரோக்கள்

Trending News