திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இமேஜே போனாலும் துணிந்து நடித்த 5 நடிகர்கள்.. ஷில்பாவாக சொக்க வைத்த விஜய் சேதுபதி

படங்களில் பல கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் ஒரு சில கதாபாத்திரம் மட்டுமே மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடிக்கிறது. அந்த அளவிற்கு படங்களின் பெயரை சொன்னாலே இவர்களின் கதாபாத்திரம் தான் நம் நினைவுக்கு வரும்.

என்னதான் ஹீரோக்கள் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தன் மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்ட பல முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது. அது போன்று இமேஜை பொருட்படுத்தாமல் இறங்கி கலக்கிய ஐந்து ஹீரோக்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read:வாடிவாசலுக்கு தயாராகும் காளைகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் சூர்யா

சூர்யா: ஆரம்ப காலத்தில் எந்த ஒரு படமும் கை கொடுக்காத இவருக்கு 2004ல் வந்த பேரழகன் மாஸ் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் கூன் விழுந்த பல்லன் கேரக்டர் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தன் அழகே போனாலும் பரவாயில்லை என்று துணிந்து இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

விஜய்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதுவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதி கொல்லும் மக்களுக்கு ஆதரவாக வரும் ஜீவானந்தம் கேரக்டர் இவருக்கு பெயர் வாங்கி தந்தது. இப்படத்தில் போலீசாரால் அடி வாங்கும் விஜய் உள்ளாடையில் இருப்பது போல ஒரு காட்சி அமைந்திருக்கும். இத்தகைய மாஸ் நடிகர் இது போன்ற காட்சியை ஏற்று நடித்தது மக்களின் வரவேற்பு பெற்றது.

Also Read:இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

விஷால்: 2011ல் விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த படம் தான் அவன் இவன். இப்படத்தின் பெயரை சொன்னாலே விஷாலின் குத்தாட்டம் தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு நடனத்தின் மீது விருப்பம் கொண்டு பெண் வேடத்தில் இவர் பெண்களோடு இணைந்து தத்ரூபமாக ஆடியிருப்பார். இது அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

தனுஷ்: 2019 ல் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் சிவசாமி என்ற முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இரு வேறு பிரிவினரால் ஏற்படும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் தன் மகனுக்காக ஊர் மக்கள் கால்களில் விழுவது போன்ற காட்சி உண்மையிலேயே நிகழ்ந்தது போன்று அமைந்திருக்கும். அந்த அளவிற்கு இவர் தன்னடிப்பினை தத்ரூபமாக கொடுத்திருப்பார். மேலும் இவரின் இதுபோன்ற முயற்சி பல பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Also Read:ராட்சசன் ஆக வந்த 5 பெஸ்ட் சைக்கோ கேரக்டர்கள்.. ஹீரோவை மறந்து கொடூரமாக நடித்த தனுஷ்

விஜய் சேதுபதி: சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன் புது முயற்சியை கையாண்டு இருப்பார் விஜய் சேதுபதி. இப்படத்தில் தன்னிடம் ஏற்படும் பெண் உணர்வால் தன் மகனை எதிர்கொள்ளும் காட்சி உருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் இவர் ஷில்பவாக வரும் காட்சி ரசிகர்களை வசியப்படுத்தியது. இவர் இது போன்ற சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

Trending News